பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் இருக்கும் ட்விட்டர் தளத்தில் தன்னையும் இணைந்து கொண்டார் நடிகை சினேகா.
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து, தாங்கள் நடித்து வரும் படங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில முன்னணி திரையுலக பிரபலங்கள் மட்டுமே இன்னும் ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருக்கிறார்கள்.
ட்விட்டரில் சினேகாவின் கணவர் பிரசன்னா இணைந்து அவ்வப்போது சினேகாவைப் பற்றியும், தான் நடித்து வரும் படங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார்.
தற்போது சினேகா ட்விட்டர் தளத்தில் தனக்கென்று தனியாக புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதனை பிரசன்னா உறுதிப்படுத்தியிருக்கிறார். " சினேகா ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள், நண்பர்களே.." என்று சினேகாவின் ட்விட்டர் தள முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.
@actress_Sneha என்ற சினேகாவின் ட்விட்டர் தளத்தில், இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் சினேகாவை பின் தொடர்ந்து வருகிறார்கள். இது குறித்து சினேகா, "கிடைத்த வரவேற்பிற்கு நன்றி. மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பேர் எனது தளத்தினை பின் தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் அன்பிற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago