'இது கதிர்வேலன் காதல்' கூட்டணியான உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா மீண்டும் 'நண்பேன்டா' படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.
'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் பிரவேசித்துள்ள நயன்தாரா, உதயநிதி ஸ்டாலினுடன் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பிப்ரவரி-14ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் யூ-டியூப் இணையத்தில் ஹிட்டடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
'இது கதிர்வேலன் காதல்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின். இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடித்து, தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். ஹிட் கூட்டணியான உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ், பாலசுப்ரமணியெம் ஆகியோர் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
'நண்பேன்டா' படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தார்கள். 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜெகதீஷ். இதனால் அவருக்கு நயன்தாராவுடன் ஏற்கனவே பழக்கம், 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பு இருவரும் மீண்டும் 'நண்பேன்டா' ஆகலாமே என்று நயனிடம் பேசியிருக்கிறார்கள்.
படத்தின் கதையை கேட்ட நயன் உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார். பிப்ரவரி 17ம் தேதி முதல் திருச்சியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. திருச்சியை பின்னணியாக கொண்ட கதை என்பதால் முழுப்படத்தையும் அங்கேயே படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களின் காமெடி சாயல் இப்படத்தில் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி முந்தைய படங்கள் போல் அல்லாமல் படத் தொடங்கத்தில் இருந்து முடியும் வரை சந்தானம் வருவது போன்று அவரது பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறாராம் ஜெகதீஷ்.
தமிழ் திரையுலகில் தற்போது பாண்டிராஜ் - சிம்பு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'கஹானி' ரீமேக்கான 'அனாமிகா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் - ஹாரிஸ் ஜெயராஜ் என ஒரு மெகா கூட்டணி இணைந்து மீண்டும் காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago