மதுரை சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு திரையுலகின் கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதால், கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது.
28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை. அறிவு, பண்பாடு, கவிதை கலந்த கல்வியை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:
தற்போது எழுதப்படும் திரைப்பாடல் களில் கொச்சைத்தனம் அதிகமாகக் காணப்படுகிறதே?
திரைப்பட பாடல்களில் கொச்சைத் தனம் இல்லை என்று சொல்லி தப்பிக்க மாட்டேன். அதே நேரத்தில் கொச்சைத்தனம் மட்டும்தான் பண்பாட்டு வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட் டேன். சமூகத்தில் நடைபெறும் நிகழ்வு களுக்கு கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் உள் ளது. இதனால் கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும்.
தற்போதைய கவிஞர்கள் தமிழ் இலக்கி யத்தில் ஆழ்ந்த புரிதல் இல்லாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்?
இது கவிஞர்களின் குறைபாடு என்று சொல்லமாட்டேன். சமூகத்தின் குறைபாடு. நம்முடைய கல்வியில் இலக்கியம், பண்பாட்டுக்கான இடத்தை குறைத்துக் கொண்டுள் ளோம். ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் தமிழ் பேசினால் அபரா தம் விதிக்கும் சூழல் உள்ளது. தமிழ கத்தில் தமிழ் இலக்கியம் கற்றுக் கொடுக்காவிட்டால் வேறு யார் கற்றுக் கொடுப்பார்கள். இலக்கியம் தெரியா மல் எழுத வருவது தவறில்லை. எழுத வந்த பிறகும் இலக்கியம் படிக்காமல் இருப்பதுதான் பிழை. நீதி போதனை வகுப்பு இப்போது இருந் தால் செழுமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும்.
இத்தனை ஆண்டுகளில் தங்களின் உயர்ந்தபட்ச சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்த விருதுகள் என் உழைப்புக்கு சமூகம் கொடுத்த அங்கீகாரம். இவற்றை சாதனையாக நினைக்கவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தி யில் என் மனதில் எரிந்துகொண்டு இருக்கும் படைப்பு என்கிற சுடரை அணையவிடாமல் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய சாதனை யாகக் கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago