சன்னி லியோனின் வடகறி

By ஸ்கிரீனன்

ஜெய் நடிப்பில் தயாராகி வரும் 'வடகறி' படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.

ஜெய், சுவாதி நடிப்பில் தயாராகி வரும் படம் 'வடகறி'. சரவண ராஜன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தினை தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இந்தி திரையுலகில் நிறைய படங்களின் ஒரே ஒரு பாடலுக்கும், நாயகியாக சில படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். தமிழில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கும் முதல் படம் 'வடகறி'. விரைவில் இப்பாடலின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

'வடகறி' படத்தில் சன்னி லியோன் நடனமாடவிருப்பதை, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ட்விட்டர் தளத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எப்போது படப்பிடிப்பு என வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்