ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய நபராக இருந்து பின்னர் சர்ச்சையில் சிக்கிய ‘ஹிப் ஹாப்’ ஆதி, தற்போது மீண்டும் சினிமாவில் பரபரப்பாக இருக்கிறார். ‘கவண்’ படத்துக்கான பாடல்களுக்கு இசையமைத்து முடித்து, தற்போது பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இசைப்பணிகள் மற்றும் ஜல்லிக்கட்டு சர்ச்சை பற்றி அவரிடம் பேசினோம்.
‘ கவண்’ படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
தற்போதுள்ள இயக்குநர்களில் கே.வி.ஆனந்த் முக்கியமானவர் என்பதால், அவரது படத்துக்கு மிகுந்த கவனத்துடன் உழைத் துள்ளேன். அதே நேரத்தில் அவரும் என் பணி களில் தலையிட்டதில்லை. ‘கவண்’ படத்தில் பாரதியார் பாடல் ஒன்று உள்ளது. புதுச்சேரியில் இருக்கும் பழைய இசைக் கருவிகளை வைத்து இப்பாடலை உருவாக்கியுள்ளேன்.
புதிதாக நிறைய பேரை நீங்கள் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். இதன் பின்னணி என்ன?
என்னைப் போன்றவர்களுக்கு என்ன பிரச் சினை என்றால், கண்டுகொள்ள ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் நான் எங் கிருந்து வந்தேனோ, அங்கிருந்து புதிதாக ஆட்களைத் தேர்வு செய்து அறிமுகப் படுத்துகிறேன். என்னுடைய பாடல்கள் வித் தியாசமாக இருப்பதாக கூறப்படுவதற்கு இந்த தேடல்தான் காரணம்.
ஒருசில இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து படங்களைக் கொடுக்கிறார்கள். உங்களின் படங்களுக்கு நடுவே நிறைய இடைவெளி இருக்கிறதே?
வேகமாக பணியாற்றுகிறோம், மெதுவாக பணியாற்றுகிறோம் என்பதெல்லாம் இல்லாமல் வேலையை ரசித்து செய்ய வேண்டும் அவ்வளவுதான். ரசித்துச் செய்வதால் மட்டுமே தாமதம், இல்லையென்றால் ஒரு வருடத்துக்கு 10 படங்கள் கூட இசையமைக்க முடியும். நானும் என் நண்பர் ஜீவாவும் மட்டுமே இசையமைப்போம். எங்களோடு பொறியாளர்கள் யாரும் கிடையாது. நாங்கள் இருவருமே அனைத்து பணிகளையும் செய்வோம். அப்போதுதான் ஒரு பாடல் எங்களுடைய பாடலாக இருக்கும் என்பது நம்பிக்கை.
‘ஹிப் ஹாப் தமிழா’ குழுவில் முக்கிய உறுப் பினராக இருக்கும் ஜீவாவை எந்த ஒரு சந் திப்பிலும், உங்களுடன் காண முடியவில்லையே. இதற்கு என்ன காரணம்?
நாங்கள் இருவருமே வீட்டுக்குத் தெரியாமல் தான் இசையமைக்க தொடங்கினோம். முதலில் இசையமைக்கும்போது, இருவருடைய முக மும் வெளியே தெரிந்தால் வீட்டில் திட்டுவார்கள் என்பது பிரச்சினையாக இருந்தது. ‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற பெயரில் பாடல்கள் செய்தோம். ஒரு கட்டத்தில் யார் இந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற கேள்வி வந்தபோது ஜீவா சொல்வான் என நினைத்தேன். அவனுக்கு எப்போதுமே வெளியே முகம் காட்டுவதில் ஆர்வம் கிடையாது. ஜீவாவுக்கு புகைப்படங்கள், மேடை உள்ளிட்ட விஷயங்களில் எல்லாம் பெரிய பயம் உண்டு. தனக்கு இந்த பெயரெல்லாம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறான். அதனால் அவனுக்கும் சேர்த்து நான் பேசுகிறேன். எங்களுடைய இயக்குநர்கள் அனைவருக்குமே ஜீவாதான் செல்லப் பிள்ளை.
பாடல்கள் மூலமாக கருத்துகள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?
மக்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். குரல் கொடுக்கிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் ஒரு பாடல் மட்டும்தான் உருவாக்கி னேன். வீதியில் இறங்கிப் போராடியது மக்கள்தான்.சிலருக்கு என் பாடல் மூலமாக பிரச்சினையின் முக்கியத்துவம் தெரிய வந்திருக்கலாம்.
அவ்வளவுதான் என்னால் செய்ய முடிந்தது. ‘ஹிப் ஹாப் தமிழா’வின் பாடல்களை மக்கள் ஷேர் செய்ததால் மட்டுமே நான் இன்று இசையமைப்பாளர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாக பெரும் சர்ச்சையிலும் சிக்கினீர்களே...
உலகத்தில் எந்த ஒரு விஷயமும் நல்லபடியாக முடிந்தால், அர்த்தமே இல்லாமல் போய்விடும். சர்ச்சைகளை ஏற்க தெரிந்தால்தான் இங்கு நிலைக்க முடியும். பொதுவாழ்க்கைக்குள் வந்துவிட்டால், அனைத் தையும் கடந்தாக வேண்டும்.
10 சதவீதம் பேர் திட்டுகிறார்கள், ஆனால் நாம் 90 சதவீதம் பேருக்காக பணியாற்றுகிறோம். எனது பாடலை ரசிக் கும் மக்களுக்காக தொடர்ச்சியாக ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். நாம் சர்ச்சையில் சிக்கிவிட்டோமே என்று நினைத்துக்கொண்டே இருந்தால், அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago