'பாண்டிய நாடு' படத்தினைப் பார்த்து விட்டு நடிகர் விஜய், இயக்குநர் சுசீந்திரனை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.
விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிப்பில், சுசீந்திரன் இயக்கிய படம் 'பாண்டிய நாடு'. இமான் இசையமைக்க, விஷால் தயாரித்திருந்தார். வேந்தர் மூவிஸ் வெளியிட்டது.
தீபாவளிக்கு வெளியான படங்களில், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி, திரையரங்குகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் 'பாண்டிய நாடு' படத்தினைப் பார்த்த விஜய், இயக்குநர் சுசீந்திரனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
விஜய் பாராட்டியவுடன், சுசீந்திரன் விஜய்யை நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தனக்கு ஏற்றவாறு ஒரு கதையை தயார் செய்யுமாறும், அக்கதை தனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இணைந்து பணியாற்றலாம் என்று விஜய் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
ஆகவே விரைவில் விஜய் - சுசீந்திரன் இணைப்பில் ஒரு படத்தினை எதிர்பார்க்கலாம். 'பாண்டிய நாடு' படத்தினைத் தொடர்ந்து, விஷ்ணு - ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'வீர தீர சூரன்' என்னும் காமெடி படத்தினை இயக்கவிருக்கிறார் சுசீந்திரன்.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago