தியேட்டர்களுக்கு லைசன்ஸ் பெறுவதை எளிமையாக்க வேண்டும் - கேயார்

By மகராசன் மோகன்

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், படத்தின் இயக்குநர் அருண்குமார், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசியதாவது:

தமிழ் சினிமாவில் இலக்கிய, இலக்கண உரைநடையாக இருந்த வசனத்தை, இயக்குநர் தர் நடைமுறைப் பேச்சுத்தமிழாக மாற்றினார். அதேபோலத்தான் இப்போது நடிப்பில் விஜய் சேதுபதியும் ஒரு டிரண்ட் செட்டராக இருக்கிறார். சின்ன பாவணைகளையும் சிறப்பாக செய்கிறார். திரைத்துறையில் இப்போது முக்கியமான பிரச்சினையே படங்களை வெளியிட திரையரங்குகள் கிடைக்காததுதான். இங்கே திரையரங்குகள் அமைக்க ‘லைசென்ஸ்’ பெறும் முறையில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை எளிமையாக்கித் தர அரசாங்கம் முன் வர வேண்டும். குறைந்தபட்சம் 50 லட்சம் செலவிலேயே அரை கிரவுண்டு இடத்தில் திரையரங்குகளை அழகாக அமைத்துக்கொடுக்க மும்பை, டெல்லியிலுள்ள நிறுவனங்கள் முன்வருகின்றன. அதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்!’’ இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “விஜய்சேதுபதி இப்போது இருப்பதுபோல மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். நிறைய பேர் வளர்ந்ததும் மாறிவிடுகிறார்கள். படத்தின் இயக்குநர் அருண்குமார், பாடல் வரிகளை காட்டவே வீட்டுக்கு வந்தார். படத்தின் பாடலுக்காகவே இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு இசையமைத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன், இன்னொரு இளையராஜா என்றே சொல்லலாம். அவ்வளவு அழகாக இசையமைத்திருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்