நெட்டிசன் நோட்ஸ்: கபாலி பாடல்களும் ஜென்நிலையும்

By க.சே.ரமணி பிரபா தேவி

ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்டன. நெட்டிசன்களில் குறியீட்டாளர்கள் படத்தின் பாடல்களில் இருந்து 'குறியீடு' கண்டுபிடிப்பது, கொண்டாடுவதிலும், இன்னொரு தரப்பினர் விமர்சிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அதையொட்டிய கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>Vivika Suresh

ஒரு ரஜினி ரசிகன் கபாலி பட பாட்ட கேட்கிறது கூட ஜென்நிலை தான் ‪#‎நெருப்புடா...

>Rajolan ‏

1. உலகம் ஒருவனுக்கா –பூமி

2. மாய நதி –நீர்

3. வீரா துறந்தாரா –காற்று

4. வானம் பார்த்தேன் –வானம்

5. நெருப்பு டா –தீ

#மகிழ்ச்சி #kabali# பஞ்சபூதங்கள்

>Bhuvaneshwaran Rajasekar

கபாலி வாழ்க. கபாலி கான் வாழ்க. குறியீடுகள் வாழ்க. இலக்கியவாதிகள் வாழ்க. சாதியப்போராளிகள் வாழ்க. புரட்சி ஓங்குக. ஆதிக்கசாதிவெறியர்கள் ஒழிக. சாதிவெறியர்கள் ஒழிக. சாதி அரசியல் புரியாத என்னை மாதிரியானவர்கள் ஒழிக.

>Shiva Chelliah

நான் வந்துட்டேன்னு சொல்லு , திரும்பி வந்துட்டேன்னு, இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனாரோ கபாலி, அப்படியே திரும்ப வந்துட்டானு சொல்லு! கபாலிடா!

>உங்கள் நண்பன் பூபதி

கபாலி திரும்ப வந்துட்டான்னு சொல்லு ‪#‎யார்கிட்ட‬ கிட்ட சொல்லனும்? அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லறவங்க காதுல விழற மாதிரி சொல்லு

>Ashwin Vijay

'திஸ் ட்ராக் இஸ் ராக்கிங், கேன் யூ பார்வர்ட் டூ மீ?' தமிழே தெரியாதவன்லாம் கார்ல ஓடிட்டு இருக்கிற பாட்டை கேட்டுட்டு டவுன்லோட் லிங்க் கேக்குறானுங்க.. கபாலி 'நெருப்புடா...' ராக்கிங் ட்ராக் இன் ரிபீட் மோட்!! :)

>Uma Sankar

‘நெருப்புடா...’ என்று பாடல் துவங்கும்போதே ரசிகர்களிடம் தீ பற்றிக்கொள்கிறது. ஏன்... மிகைப்படுத்தல் இல்லாத படங்களைத்தான் ரசிப்பேன் என்று அறிவுஜீவிகளாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், தன்னை மீறி ஆட்கொள்ளுதல் என்பது இதுபோன்ற நரம்பு புடைக்கும் பாடல்கள்தான். ரஜினி படம் என்றால் மிகையாகத் தான் இருக்க வேண்டும். யதார்த்தமாக இருப்பதற்கு, ரஜினி என்ன... கடலோரக் கவிதையா எழுதப்போகிறார்?

>சபாஸ் நாயிடு

வீர துறந்தாரா எமை ஆளும் நிரந்தரா

#கானபாலாவ செந்தமிழ்ல பாடவச்ச மொதஆளு சந்தோஷ் நாராயணனா தான் இருக்கும்.

>கவிஞன் மோக்கியா ‏

கபாலி பாட்டு எப்டி இருக்கு?- நெருப்புடா நல்லா இருக்கு.

அப்போ மத்த பாடல்கள்?- வெறுப்புடா.

>Prabha Karan

தேவர் மகன் தொடங்கி , சின்ன கவுண்டர் , நாட்டாமை , விருமாண்டி, சுந்தரபாண்டியன் , கொம்பன் , மருது வரைக்கும் பொங்காத "மேன் மக்கள்" , கபாலி பாட்டுக்கே இந்த பொங்கல் பொங்குவது அவர்களை இன்னும் பிரகாசமாக வெளிப்படுத்துகிறது.

>சத்தி லிங்க் ‏

அண்ணே எம்.ஏ. பிலாசபினா என்னாணே?

கபாலி பாட்டுக்கு இவங்க கொடுக்கிற வெளக்கம்தான்!!!

>கைமுறுக்கு

ஹெட்செட்ட தொடச்சு போட்டாச்சு, பக்கத்தூட்டு சிஸ்டம்லையும் கேட்டாச்சு, பாட்டு ஒன்னும் அவ்ளோ நல்லாலில்லையே,! #கபாலி

>தெனாலி™ ‏

ரஜினி பட இசைக்கு புது கலர் கிடைத்திருக்கிறது.. அது பொருந்தியிருக்கிறதா என்பது பட ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்

>venkkiram ‏

ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களின் குரலாக ஒலிக்கும் வரிகளுக்கும் கோட்- சூட் கபாலி கதைக்களத்துக்கும் எந்தளவு தொடர்பு இருக்கும்னு தெரியல #கபாலி

>தேன்சிட்டு

#கபாலி. சினிமாவை சினிமாவாகவே பார்ப்போம். தமிழன், அவனுக்காவே என்றெல்லாம் பில்டப் வேண்டாமே! போன தலைமுறை செய்த தவறை நீங்களும் செய்யவேண்டாம்.

>Unnai Kelai ‏

துப்பாக்கி டா மங்காத்தாடா எல்லாம் பொய்

கபாலி டா வே மெய்.

>மாந்தரஞ்சேரல் ☀

ரஜினி எனும் பிம்பத்தை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், கபாலி பாடல்கள் நன்றாகவே இருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்