சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் முதல் நான்கு நாட்களில் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. புதுமுகம் திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்த இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்தது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை கணக்கில்கொண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த 'மதகஜராஜா' படம் திட்டமிட்டப்படி 6 ஆம் தேதி வெளியாகவில்லை. இதனால் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தன.
ராஜேஷ் வசனம், சிவகார்த்திகேயன் நடிப்பு என மக்களிடையே இப்படம் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமன்றி முதல் நாள் வசூல் பல இடங்களில் 'சிங்கம் 2' படத்தின் வசூலையும் மிஞ்சியது.
முதல் நான்கு நாட்களில் மட்டும் இப்படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திற்கு இது ஜாக்பாட் காலம்தான். எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி நடித்த 'தேசிங்கு ராஜா' படமும் வசூலை வாரிக் குவித்தது. அதனைத் தொடர்ந்து இப்படமும் வசூலை குவித்து வருகிறது.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படக்குழு மீண்டும் இணைந்து ஒரு படமெடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago