காதலனோ, காதலியோ ஒருத்தரிடம் இருந்து இன்னொருத்தர் அன்பை பரிமாறிக்கறப்ப, ‘‘நீ இல்லைன்னா நான் இல்லை; என்ன கஷ்டம்னாலும் நான் உன்னை பார்த்துப்பேன்; நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்!’’ன்னு சொல்வாங்க. இதெல்லாம் சரிதான். இருந்தாலும் ஒரு அம்மா, அப்பா அவங்களோட பசங்க மேல வைக்கிற அன்பு அளவுக்கு ஒரு பையனும், பொண்ணும் இருக்கிறதில்லைன்னுதான் தோணுது.
ரெண்டு பசங்க சண்டைப் போட்டுக்கும்போது, தன் பையனே வம்புக்குப் போயிருந்தாலும், ‘‘தெரியாமப் பண்ணியிருப்பாம்பா’’ன்னு பெத்தவங்க விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க. ஆங்கிலத்துல ‘ப்ள்ட் இஸ் திக்கர் தென் வாட்டர்’னு ஒரு பொன்மொழி உண்டு. ஒருமுறை, ரெண்டு முறை, ஆயிரம் முறை, ஏன் லட்சம் முறை அன் கன்டிஷனலான அன்பை அம்மா, அப்பாவாலத்தான் கொடுக்க முடியும். அந்த லவ்.. வேற லவ்!
காதலிக்கிறப்ப கொஞ்சம் நேரமானாலோ, போன் பண்றப்ப எடுக்கலைன்னாலோ எந்த அளவுக்கு சண்டை பிடிக்கிறோம்? ஆனா, எத்தனைமுறை போனை எடுக்காம விட்டாலும் அதே அன்பைதான் பசங்க மேல பெத்தவங்க காட்டுவாங்க. அவங்க நம்ம மேல காட்டுற அந்த அன்பைத்தான், காதலிக்கிறப்ப காதலர்கள் ஒருத்தர்ட்ட ஒருத்தர் தேடுறாங்கன்னு நினைக்கிறேன்.
சில பேர் தன்னோட கணவனைப் பற்றி பக்கத்து வீட்லயோ, பிறந்த வீட்லயோ ‘‘இப்படி பண்றார், அப்படி பண்றார்?’’னு கம்ப்ளைன்ட் செய்வாங்க. ஆனா, எந்தப் பையனையும், பொண்ணையும் வெளி ஆளுங்கக்கிட்ட அப்பா, அம்மா விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. அவங்க காட்டுற அந்த லவ்தான் எல்லாருக்கும் தேவைப்படுது.
நல்லா நினைவுல இருக்கு. 2004 இல்லைன்னா 2005-ல் நடந்தது இது. மும்பையில் ஒரு டெலிவிஷன் சேனல் நடத்திய டான்ஸ் ஷோவுக்கு சிறப்பு விருந்தினரா போயிருந்தேன். நிகழ்ச்சியில் ஒரு சின்னப் பையன் மேடையில் ஆடினான். நாலா பக்கத்துலேர்ந்தும் கைதட்டல், ஆரவாரம், சத்தம்னு குவியுது. ஆனா, அந்தப் பையன் மட்டும் ஒரே திசையைப் பார்த்துக்கிட்டே ஆடிட்டிருந்தான். ஏன்னு, அவன் பார்க்கிற பக்கத்தைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே அவனோட அண்ணன் கைகளை முன்னும், பின்னும், மேலேயும், கீழேயும் சைகை காட்டிட்டிருந்தான். அதை பார்த்துக்கிட்டே மேடையில் அந்தப் பையன் ஆடினான். அப்போதான் தெரிந்தது, அந்தப் பையனுக்கு காது கேட்காது, பேச முடியாதுங்கிற விஷயம். என்ன சொல்றதுன்னே எனக்குப் புரியலை. அரை மணி நேரத்துக்கு என்னால் எதுவுமே பேச முடியலை. என்னை அறியாமலே கண்ணுலேர்ந்து தண்ணி வந்துக்கிட்டே இருந்துச்சு.
அதே மாதிரிதான் பன்னிரெண்டு வருஷத்துக்கு அப்பறம் இப்போ ‘தேவி’படம் வந்தப்போ சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். இதுவும் சின்னப் பசங்க டான்ஸ் ஷோதான். மும்பையில் நடந்த ஷோவுல என் மனசு ரொம்ப கலங்கின மாதிரி, இனிமே ஆகாதுன்னு ஸ்ட்ராங்கா இருந்தேன். ஆனா, இந்த ஷோவுல நான் திரும்பவும் கலங்கிட்டேன். டான்ஸ்ல எனக்கெல்லாம் சவுண்ட் கேட்டாதான் ஒரு கனவு வரும். ‘ஒண்ணுமே கேட்காம எப்படி அவங்களால எப்படி ஆட முடியுது!’ன்னு எனக்குள்ளே என்னமோ ஓடிட்டே இருந்துச்சு. இப்பவும்தான்.
என் பசங்களோட பிளைட்ல போறப்ப அவங்க ஏதாவது குறும்புத்தனம் பண்ணினா, கோபம் வர்றது இல்லை. ஆனா, அதுவே பக்கத்துல இருக்குறவங்களோட பசங்க ஏதாவது கலாட்டா செஞ்சா கோபம் கோபமா வருது. நம்ம பசங்கன்னு இல்லை. நம்ம பக்கத்துல இருக்கிற பசங்க மேலேயும் அதே அன்பை செலுத்தணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, என்னால அப்படி பண்ண முடியறது இல்லை. அப்படி பண்ணணும்னு ஆசையா இருக்கு. இனிமேல் பண்ணுவேன்னு நினைக்கிறேன். எல்லாரையுமே லவ் பண்றது எவ்வளவு பெஸ்ட்டான விஷயம்!
அதே மாதிரி நம்ம படம் ரிலீஸ் ஆகும்போது அதோட வர்ற மத்த படங்களும் நல்லா ஓடணும்னு மனசு வர்றதில்லை. ‘என் படம் நல்லா ஓடணும்… அவ்வளவுதான்!’ அதுதான் ஹூயூமன் சைக்காலஜி. அதை கடந்து வர இப்போ நான் முயற்சி பண்றேன். ஆனா, நான் எப்பவுமே ஹெல்த் விஷயத்தில் நம்மைச் சுத்தி இருக்கிற எல்லாருமே நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அப்போதான் அவங்க கீழே விழுந்தாலும் எழுந்து வர முடியும். பணம் இல்லைன்னா கூட ஹெல்த் சரியா இருந்தா எப்போ வேணும்னாலும் சம்பாதிக்க முடியும்.
ஷூட்டிங்ல இருக்கும்போது ஏதாவது தப்பு நடந்துட்டா, எனக்கு கோபம் வரும். ஆனா, அடுத்த இரண்டாவது நிமிஷத்துக்குள்ளேயே அது எல்லாத்தையும் மறந்துடுவேன். ஹார்ட்டுக்குப் கொண்டுட்டு போனதே இல்லை. முடிஞ்ச வரைக்கும் ஜாலியா இருப்போமே. அதனால யாருக்கு என்ன இப்போ.
சில சமயத்துல நமக்குத் தெரியாத ஆளுங்களைவிட நமக்கு தெரிஞ்சவங்க மேலதான் கோபத்தை அதிகமா காட்டுவோம். ஒரு சின்ன பிரச்சினையாதான் இருக்கும். ஆனா, வருஷக் கணக்குல பேசிக்கிறதே இல்லை. தப்பு பண்ணிட்டாங்கன்னு கோபம் இருக்க வேண்டியதுதான். ஆனா, அது ஒண்ணு, ரெண்டு நாட்களோட சரியாயிடணும். என்னோட விஷயத்துல நான் தப்பு பண்ணியிருந்தாலும் சரி, எதிர்ல இருக்கிறவங்க தப்பு பண்ணினாலும் சரி, உடனே நான் போன் செய்து பேசிடுவேன். அப்படி அவங்க போனை எடுக்கலைன்னா ரெண்டாவது, மூணாவது முறையும் முயற்சி செய்வேன். அப்படியும் இல்லைன்னா ஃபிரெண்ட் மூலமா, ‘‘இப்படி நடந்துடுச்சு…’’ன்னு நடந்ததைச் சொல்லி பேசச் சொல்வேன். மொத்தத்துல என்னால பேசாம இருக்கவே முடியறது இல்லை. அப்படியும் முடியலைன்னா என்ன பண்றதுன்னு தெரியலீங்க.
எங்க வீட்டுலேயே சித்திங்க, மாமான்னு அப்பப்போ சின்னச் சின்ன சண்டை வரும். இதனால அவங்கங்க வீட்ல நடக்கிற விஷேசங்களுக்குக் கூட ஒரு சில சமயத்துல போகாம இருந்துடுவாங்க. ‘பக்கத்துல இருக்கிறப்ப விட்டுட்டு இல்லாதப்ப வருத்தப்படுறதா?’ன்னு சொல்லி பேச வைப்பேன். நான் சின்னப் பையனா இருக்கிறப்ப என் பேச்செல்லாம் பெருசா எடுபடாது. இப்போ அதெல்லாம் நடக்குது.
இப்படி சமத்தா பேசி சமாதானப்படுத்தினாலும் நானும் லவ் விஷயத்தால சில சம்பவங்களை சந்திக்கத்தான் செய்தேன். கிரிக்கெட்ல நம்ம விராட் கோலி மாதிரி. அது என்னன்னு அடுத்த வாரம் சொல்றேனே.
எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago