விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளது.
'வாலு' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய் சந்தர். அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களை சந்தித்து கதை கூறி வந்தார்.
அவர் கூறிய கதை பிடித்துவிடவே, விக்ரம் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இப்படத்தின் நாயகிக்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். முதலில் ஒப்பந்தமான சாய்பல்லவி விலகவே, தற்போது தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம் நடித்து வந்ததால், விஜய் சந்தர் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது பிப்ரவரி 10ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளார்கள்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago