விஸ்வரூபம் 2 DTHல் வெளியிடுவேன் : கமல்

By செய்திப்பிரிவு

'விஸ்வரூபம் 2' படத்தினை அமெரிக்காவில் DTHல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் கமல்.

'விஸ்வரூபம்' படம் தாமதமாக வெளியானதற்கு கமலின் DTH வெளியீட்டு திட்டமும் ஒரு முக்கியமான காரணம். தற்போது 'விஸ்வரூபம் 2' படத்திற்காக மீண்டும் அத்திட்டத்தினை கையில் எடுத்திருக்கிறார் கமல்.

பெங்களூரில் நடைபெற்ற FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry)-க்கான சந்திப்பில் பேசிய கமல், தனது திட்டத்தினை அறிவித்திருக்கிறார்.

“ டிவியில் வெளியாவதால் மக்கள் திரையரங்குகிற்கு வரமாட்டார்கள் என்பது தவறு. படத்தினை டிவியில் நேரடியாக வெளியிடும் காலம் வரும். படத்தினை டிவியில் பார்த்துவிட்டு, பெரிய ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என்று தியேட்டருக்கும் வருவார்கள். அனைவரது வீட்டிலும் சமையலறை இருக்கும் போது, இவ்வளவு ஹோட்டல்கள் எப்படி நடத்தப்படுகின்றன? இதைப் புரிந்து கொள்ளாமல் பலர் DTH வெளியீட்டை எதிர்க்கின்றனர்.

எனது அடுத்த படத்திற்கு DTH திட்டமிருக்கிறது. இந்தியாவில் அது முடியாவிட்டால், எனது திட்டத்தினை வெளிநாட்டில் செயல்படுத்துவேன். 'விஸ்வரூபம் 2' படத்தினை அமெரிக்காவில் DTHல் வெளியிடுவேன் ” என்று கூறியுள்ளார் கமல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்