இதுதான் நான் 40: சின்ன பிளாஸ்பேக்!

By பிரபுதேவா

அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்த நான் திரும்பவும் அவங்களோடு எப்போது பேசினேன்னு சொல் றதுக்கு முன்னால, ஒரு சின்ன பிளாஸ்பேக் போய்ட்டு வரலாம்னு இருக்கேன். ஏன்னா, இதை எழுத ஆரம்பிக்கிற இந்த நேரம், மும்பையில் ஒரு படத்தோட பாட்டுக்கு மாஸ்டரா வேலை பார்த்துட்டிருக்கேன். அதான், இப்போ என்னோட கடந்தகால டான்ஸ் வாழ்க்கை நினைவுக்கு வந்துடுச்சு.

என்னோட பதினாலாவது, பதினைஞ் சாவது வயசுல தமிழ்ல டான்ஸரா நிறை யப் படங்கள்ல வேலை பார்த்துட்டிருந் தேன்னும், அந்த நேரத்துலதான் தெலுங்குல சிரஞ்சீவி சாரோட படங்கள் அமைஞ்சதுன்னும் ஏற்கெனவே உங்கக் கிட்ட சொல்லியிருக்கேன். மாஸ்டரா வேலை பார்க்குற இந்த நேரத்துல இன்னும் அவரைப் பத்தி சொல்லணும்னு நினைக்கிறேன்.

நாங்க சேர்ந்து வேலை பார்த்த பாடல்கள் எல்லாமே ஹிட் ஆக ஆரம்பிச்சதும், தெலுங்குல படு பிஸியாக ஆரம்பிச்சேன். அதுவும் நானும் சிரஞ்சீவி சாரும் சேர்ந்தா அந்தப் பாட்டு கண்டிப்பா ஹிட்டுன்னு பெயராச்சு. இன்னும் சொல்லணும்னா, சிரஞ்சீவி சார் அடுத்து என்ன படம் பண்ணப் போறாருங்கிற விஷயம், அவர் கமிட் ஆனதுமே எனக்கும் தெரிஞ்சுடும். ஏன்னா, தயாரிப்பாளருங்க அவரை புக் பண்ணிய உடனே என்னையும் அதே படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா புக் பண்ண வந்துடுவாங்க.

தெலுங்குல நான் டிராவலாக ஆரம்பிச்ச அந்த நேரத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா இவங்க எல்லோரும் மிகப் பெரிய இடத்தைப் பிடிச்சு நடிச் சுட்டிருந்தாங்க. தெலுங்கு சினிமா வுக்குள்ள நான் போனதும் அவங்க எல்லாருடைய படங்களுக்கும் நான் மாஸ்டரானேன். அப்பாவோட டான்ஸ் ஸ்டைல், என்னோட ஸ்டைல் எல் லாமும் ஒண்ணா சேர்ந்து அந்த நேரத்துல ஒரு புது டிரெண்ட்டா அது பேசப்பட்டுச்சு. அது ரொம்பவே அங்கே கிளிக் ஆனது.

சிரஞ்சீவி சார் அங்கே மிகப் பெரிய இடத்தை உருவாக்கி நடிச்சுட்டிருந்த நேரம். எப்பவுமே அவர் எவ்வளவு பிஸின்னாலும் சாயந்திரம் டான்ஸ் ரிகர்சல்ல சரியா வந்து கலந்துப்பார். என்னைப் பார்த்ததும், ‘‘பிரபு சாப் டியா?’’ன்னு கேட்பார். நான் பதில் சொல்றதுக்குள்ளயே பக்கத்தில் இருக்கிறவங்கள்ட்ட ‘‘பிரபுக்கு தோசை வையுங்க’’ன்னு சொல்வார். வீட்டுல அம்மா தோசை சுட்டுக் கொடுக்கும்போது எப்படியோ, அதே மாதிரிதான் 20 தோசைங்க சாப்பிடுவேன்.

நான் ஒரு பக்கம் சாப்பிட்டுட்டே இருப்பேன். அவர் அந்தப் பக்கம் ஆடிட்டே இருப்பார். ‘‘என்ன பிரபு ஸ்டெப்ஸ் நல்லா இருக்கா?’’ன்னு என்கிட்ட கேட்பார். சின்னப் பையன் நான், அவர் ஆடிட்டு இருக்குற நேரத் துல அவருக்கு முன்னாடி சாப்பிட்டுட்டு இருக்கேனேன்னு தப்பா நினைக்க மாட்டார். சமீபத்தில்கூட தேவி பிரசாத் இசை நிகழ்ச்சியில சந்திச்சேன். என்னை பார்த்ததும் கட்டிப் பிடிச்சுக்கிட்டார். ‘‘என்ன பிரபு இங்கேதான் இருக்கியா? வீட்டுக்கு வா வீட்டுக்கு வா!’’ன்னு அவ்வளவு உரிமையோட கூப்பிட்டார். எப்பவுமே நான்னா அவருக்கு ஸ்பெஷல். எனக்கும் அவர் ஸ்பெஷல். நான் மட்டுமில்லை; திறமையானவங்க யாரா இருந்தாலும் அப்படி பாராட்டி, தட்டிக் கொடுப்பார். கூடவே வேலையும் கொடுப்பார்.

ராகவேந்திரா ராவ் சார் இயக்கத்தில் ‘கரான மொகுடு’ன்னு ஒரு படம். அதுல ‘பங்காரு கோடி பேட்டா’ன்னு ஒரு பாட்டு. அந்தப் பாட்டு செம ஹிட்டாச்சு. படத்தோட வெற்றிவிழாவுல சிரஞ்சீவி சார் என் கையில மோதிரம் போட்டுவிட்டார். நான்னா, அவருக்கு அப்படி ஒரு அன்பு!

சிரஞ்சீவி சாரோட ரசிகர்களுக்கும் என்னை நல்லாத் தெரியும். பார்க் கிறப்பல்லாம், ‘‘அண்ணனோட அடுத்த படமும் நீங்கதானே பண்றீங்க!’’ன்னு கேட்பாங்க. நானும், ‘‘ஆமாம்’’னு சொல்வேன். பெரும்பாலும் அவரோட படங்கள்ல இன்ட்ரோ பாட்டு நான்தான் பண்ணுவேன். அதுவும் டான்ஸுக்கு அதிகம் வேலை இருக்கிற பாட்டெல்லாம் என்கிட்டத்தான் வரும்.

சென்னையில இருந்து ஹைதரா பாத்துக்கு காலையில 6 மணிக்கு ஒரு பிளைட் இருக்கும். அந்த நேரத்துல எல்லாம் அந்த பிளைட்டுக்கு ரெகுலர் கஸ்டமர் நான். ‘‘என்ன சார் ஷூட்டிங்கா?’’ன்னு அந்த பிளைட்ல வேலை பார்க்கிற எல்லாரும் பழக்க மாகிட்டாங்க. சென்னைக்கும், ஹைதரா பாத்துக்கும் அப்படி ஒரு பிஸியான டிராவல்ல இருந்தேன்.

அதே மாதிரி அப்போ இருந்து இப்போ வரைக்கும் ஹீரோவோ, ஹீரோயினோ என்னோட பாட்டுக்கு டான்ஸ் ஆட வந்துட்டு திரும்பும்போது கண்டிப்பா மூணு, நாலு கிலோ குறைஞ்சுதான் போவாங்க. அந்த அளவுக்கு ஆட வேண்டியிருக்கும். இப்போ நாங்க எடுக்கிற ‘தேவி’ படத்துல வர்ற தமன்னாவோட டீசர் ஆட்டத்துக்கு நல்ல வர வேற்பு கிடைச்சிருக்கு. அவங்க எப்பவுமே டயட், உடற்பயிற்சின்னு ரொம்ப கவனமா இருப்பாங்க. ஆனா, இந்தப் படத்தோட பாட்டு ஷூட்டிங் சமயத்துல அது எதுவுமே தேவையில்லன்னு சொல்லிட்டேன். எல்லாமே டான்ஸ்ல சரியாயிடும்னு சொன்னேன். அப்படியே நடந்துச்சு.

அப்போவெல்லாம் நான் அடுத்து ஷூட்டிங் எந்தப் பாட்டுக்கு பண்ணப் போறேன்னு சிலசமயம் எனக்கே தெரியாது. தேதி கொடுத்து கமிட் ஆனதும் ஒரு படத்தோட ஹீரோ இன்னொரு படத்தோட ஹீரோ கிட்டேயும், ஒரு படத்தோட இயக்குநர் இன்னொரு படத்தோட இயக்குநர்கிட்டேயும் பேசி அவங் களே ஷூட்டிங் இந்த இடம்னு முடிவெடுத்துடுவாங்க.

இப்படி ஒரு பிஸியான நேரத்துல திடீர்னு நான் ஹீரோ ஆனா என்னாகும்? எல்லாருக்கும் பயங்கர ஷாக். ‘காதலன்’ படம் ரிலீஸாகி இந்தியா முழுக்க தெரிஞ்ச பிறகுதான் எல்லாரும், ‘நம்ம பிரபு... நம்ம பிரபு’ன்னு பாராட்ட ஆரம்பிச்சாங்க. அதுவரைக்கும் ஒரு மாதிரிதான் போச்சு.

இப்படி தெலுங்குல நான் பெரிய ஸ்டார்ஸ் படங்கள்ல மாஸ்டரா பண்ணினதுதான் எனக்கு நல்ல அடித்தளம் அமைச்சுக் கொடுத்தது. சினிமாவை ப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக் குள்ள நுழைஞ்சா நடிகனாகவும், மும்பைக்குள்ள நுழைஞ்சா டைரக்ட ராவும், தெலுங்கு பக்கம் நுழைஞ்சா மாஸ்டராவும் எனக்கே தெரியாம நான் ஆயிடுறேன். நடிப்பு, டான்ஸ், டைரக்‌ஷன் இந்த மூணுலயும் கவனம் செலுத்தினாலும்கூட இதில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு இருக்கு? அது என்னன்னு அடுத்து சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்