ஜில்லா விஜய் சொல்ல வந்த கதை!

By கா.இசக்கி முத்து

தலைவா படத்தின் வெற்றியைக் கொண்டாடக்கூட 'ஜில்லா' படத்திற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் விஜய். அவரை இயக்கிக்கொண்டிருப்பவர் டைரக்டர் நேசன். ஷூட்டிங் இடைவேளைக்கு நடுவில் அவரைச் சந்தித்து 'ஜில்லா'வின் பல்ஸ் பார்த்தோம்.

விஜய் இப்போது தமிழில் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் அவரது கால்ஷீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?

'வேலாயுதம்' படமத்தின் சூட்டிங் சுமார் 1.5 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போது விஜய்யுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சார் உங்களுக்காக 2 கதைகள் வைத்து இருக்கிறேன் என்று கூறி, 2 கதையையும் சொன்னேன். அதில் அவர் டிக் அடித்த கதைத் தான் ஜில்லா. இக்கதையை கேட்டவுடன் கண்டிப்பாக நான் தான் இப்படத்தினை செய்வேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் கொடுத்த நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் கழித்து 'ஜில்லா' படப்பிடிப்பினை துவங்கி இருக்கிறோம்.”

விஜய் ரசிகர்களுக்கு எந்த விதத்தில் 'ஜில்லா' ஸ்பெஷலாக இருக்கும்?

“தலைவா படத்தைத் தொடர்ந்து இந்த படம் வெளிவருவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதை எல்லாம் நிறைவேற்றும் வகையில் ஜில்லா இருக்கும். கலர்புல் பாடல்கள், பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், செண்டிமெண்ட் என ஒரு கலர்புல் கலவையாக இந்தப் படம் இருக்கும்.

விஜய் - மோகன்லால் காம்பினேஷனை எப்படி பிடிச்சீங்க?

'ஜில்லா' படத்தோட கதையைக் கேட்டதும், 'நாம இதை பண்றோம்”ன்னு விஜய் சொல்லிட்டார். படத்தில் அவருக்கு சமமான ஒரு பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு நாள் மோகன்லால் சார் நடிச்சா நல்லா இருக்குமே என்று தோன்றியது. விஜய்யிடம் சொன்னேன் சூப்பர் சாய்ஸ் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.

எனக்கு மோகன்லால் என்ன சொல்லுவாரோ என்ற பயம் இருந்தது. கேரளாவிற்கு சென்று சந்தித்து கதையைச் சொன்னேன். உடனே நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். விஜய் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், கூடவே மோகன்லாலும் நடிக்கிறார் என்றவுடன் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரெண்டு பேரையும் வைத்து காட்சிகள் இயக்கும் வேளையில், மானிட்டரைப் பார்க்கும் போது 'ஜில்லா' கண்டிப்பாக வெற்றிப் படம் தான் என்று என் மனது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

படம் எப்போது ரிலீஸ்?

படம் 60 சதம் வரை முடிந்து விட்டது. இன்னும் படப்பிடிப்பு நடத்த நிறைய காட்சிகள் இருக்கிறது. அனைத்தையும் முடிந்தவுடன் தான் படம் எப்போது வெளியாகும் என்பதை முறைப்படி அறிவிப்போம். இணையத்தில் வரும் 'ஜில்லா' வெளியீடு குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்பதினை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

'துப்பாக்கி' ஹிட் ஆனதால்தான் இந்தப் படத்திலும் காஜல் அகர்வாலை ஹீரோயினாக போட்டீர்களா?

“அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. விஜய் கிட்டதட்ட அனைத்து நாயகிகளுடன் நடித்து விட்டார். அவருடன் நடிப்பு, டான்ஸ் என அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த வகையில் காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமாக இருந்தார். இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக 'துப்பாக்கி' படத்தை விட பேசப்படும்.

'ஜில்லா' கதை தான் என்ன?

“இப்போதைக்கு கேட்காதீர்கள். அதே நேரத்தில் இணையத்தில் இந்தப் படத்தின் கதை என்று இப்பவே 10 கதைகளை எழுதி தள்ளிட்டாங்க. எதுவுமே உண்மையில்லை. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது 'நீங்க எழுதின கதையை விட.. எதிர்பாக்குறதை விட 'ஜில்லா' இரண்டு மடங்கு இருக்கும்' என்பது மட்டும் உண்மை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்