லிங்குசாமி - சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவிருக்கிறது.
'மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக இணையத்தினை வலம் வரத் தொடங்கின. அடுத்து சூர்யாவுடன் இணையப் போகும் இயக்குனர் என லிங்குசாமி, கெளதம் மேனன், நலன் குமாரசாமி என பல்வேறு இயக்குநர்கள் பெயர்கள் இடம்பெற்றன.
சூர்யா தரப்பில், லிங்குசாமி இயக்கவிருக்கும் படத்தின் நடிப்பார் என்று அறிவித்தார்கள். ஆனால் சூர்யாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், திரைக்கதை அமைக்கும் பணிகள் முடியாததாலும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், இசையமைப்பாளராக யுவன், நாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இது குறித்து லிங்குசாமி “முதற் கட்டப் படப்பிடிப்பு மும்பை அல்லது ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறோம். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது இப்படம். அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் இப்படம் அமையும். வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அதற்காக தயாராகி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago