தமிழுக்கு திரும்பும் மாதவன்!

By செய்திப்பிரிவு

நீண்ட நாட்கள் கழித்து இயக்குநர் சுதா கோன்கரா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மாதவன்.

தமிழ் திரையுலகில் தடம் பதித்த மாதவன், பின்னர் இந்திப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்தியில் நடிக்க ஆரம்பித்ததால், தமிழில் படங்களை குறைத்துக் கொண்டார். 2009ல் 'யாவரும் நலம்', 2010ல் 'மன்மதன் அம்பு', 2012ல் 'வேட்டை' என வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார்.

நீண்ட நாட்கள் கழித்து தற்போது சுதா கோன்கரா இயக்கும் படத்தில் நடிக்க வரும் டிசம்பர் மாதம் முதல் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த 'துரோகி' படத்தினை இயக்கியவர் தான் சுதா கோன்கரா. ஒய்வு பெற்ற பாக்ஸர் கதை ஒன்றினை மாதவனிடம் கூறி அவரது தேதிகளை வாங்கியிருக்கிறார்.

இப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடலமைப்பினை மாற்றி ஜம் என்றிருக்கிறார் மாதவன். மாதவன் ரிட்டன்ஸ்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்