'வெண்ணிலா கபடி குழு', 'நீர்ப்பறவை' உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு தற்போது 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'எத்தன்' படத்தினை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் 'கலக்குற மாப்புள்ள' படத்தில் விஷ்ணு நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். ஸ்ரீநாத் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார்கள்.
'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்' போன்ற பல படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தயாரிக்கும் 'முண்டாசு பட்டி' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஜோடியாக 'அட்டகத்தி' நந்திதா நடிக்கிறார்.
'வெண்ணிலா கபடி குழு' படத்தில் அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்னும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை 'தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ்' தயாரிக்கவிருக்கிறது.
பிரபல இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கும் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் முக்கிய பாத்திரத்திலும் விஷ்ணு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
'நான் ராஜாவாக போகிறேன்' படத்தினைத் தயாரித்த சந்திரன் அடுத்த படத்தை தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் நாயகனாகவும் விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவ்வாறு முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் விஷ்ணு.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago