சினிமாவை நான் வியாபாரமாகத்தான் பார்க்கிறேன்: கே.எஸ்.ரவிகுமார் சிறப்பு பேட்டி

By மகராசன் மோகன்

கடந்த 26 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக பயணித்து வருபவர், கே.எஸ்.ரவிகுமார். ‘லிங்கா’ படத்துக்கு பிறகு தமிழ், கன்னடம் என 2 மொழிகளில் சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்று கலகலப்பான ஒரு பயணத்தை தொட்டிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருந்தவரை சந்தித்தோம்.

இந்தப் படத்திலும் சுதீப் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறதே?

வில்லனா இருக்கிறவனை நல் லவனா இருக்கிறவன் உடைக்கி றதுதான் இப்படத்தின் கதை. அதுக்காக இது டபுள் ரோல் படம்னு நினைச்சுடாதீங்க. டபுள் டைமன் ஷனல் படம். அந்த உண்மையை யெல்லாம் படத்தோட ரெண்டா வது ரீல்லயே சொல்லிடுவேன். சஸ்பென்ஸ்ங்கிற பேர்ல இப்போ ரசிகர்களை ஏமாற்ற முடியாது. படத்தோட இடைவேளையில வந்து அடுத்து என்னன்னு டிவிட் போட்டுட்டு போயிடறாங்க. அதெல்லாம் மனசுல வச்சுத் தான் இந்தப் படத்தை கொடுத் திருக்கோம்.

சமூக வலைதளங்களின் விமர்சனங் களுக்கு தகுந்த மாதிரி தற்போது படங்களை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளதே?

இந்த நிலை எல்லா காலகட் டத்திலுமே இருந்திருக்கு. சமூக வலைதளம் என்பது மக்கள்தானே. என்னோட டீம்ல எப்பவுமே காமெடி, செண்டிமெண்ட், சண்டை, எமோஷனல்னு எல்லா விதமான ஐடியாக்களையும் கொடுக்குறவங்களை வச்சுதான் விவாதத்தில் ஈடுபடுவேன். அவங் களை மக்களோட பிரதிநிதியா வச்சுதான் நான் கதையை தயார் செய்றேன். என்னோட ‘பஞ்ச தந்திரம்’ படத்தை பார்த்துட்டு சுமார்னு சொன்னவங்க இன் னைக்கு ஏதாவது டென்ஷன்னா அந்தப் படத்தைத்தான் போட்டு பார்க்குறேன்னு சொல்றாங்க. எல்லாரையும் திருப்திபடுத்துற மாதிரி படங்களை தொடர்ந்து கொடுக்க முடியாது.

எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கூட அப்படி வந்ததில்லை. ஒவ் வொருத்தரோட ரசனையும் மாறும். அதனால சமூக வலைதளங்கள்ல எழுதுறவங்க தனிப்பட்ட விமர் சனங்களை பதிவு செய்யுங்க. தப் பில்லை. ஆனா, ஒட்டுமொத்தமா சினிமா பார்க்கதேன்னு சொல்ற துக்கு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொன்னா எங்களை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லைன்னு சொல்ல வேண்டியிருக்கும்.

தொண்ணூறுகளில் இருந்த கமர்ஷியல் சினிமாவுக்கான தளம் இப்போதும் இருப்பதாக கூற முடியுமா?

எப்போதும் அது மாறாது. இங்கே டெக்னாலஜி மட்டும்தான் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். என்னோட பள்ளிக்கூட நாட்களில் எம்.ஜி.ஆர் படங்கள் பார்க்கக்கூடாதுன்னு வீட்ல சொல்லுவாங்க. காரணம், அதுல காதல் காட்சிகள் அதிகம் இருக் கும்னு. சின்ன வயசுல ஒருமுறை, ‘காதலிக்க நேரமில்லை.. காத லிப்பார் யாருமில்லை’ன்னு பாட்டை பாடிக்கிட்டிருந்தேன். என்னோட அப்பா என்கிட்ட வந்து, ‘என்ன காதல், கீதல்!’னு கன்னத் துல ஓங்கி அறை விட்டார். அவரே பின்னாளில் எங்கள் குடும்பத்தில் ஒரு காதல் திருமணத்துக்கு சம்மதம் சொல்கிற நிலை வந்துச்சு. அதுதான் கால மாற்றம். அதே போல கமர்ஷியல் சினிமா எப் போதும் மாறாது. காலத்துக்கு தகுந்த மாதிரி கதையை சொல்ல வேண்டியிருக்கும். ரசனையும், சுவையும் மாறி யிருக்கிறது. அவ்வளவுதான்.

உங்கள் முதல் படமான ‘புரியாத புதிர்’ மாதிரி ஒரு படத்தை மீண்டும் எடுக்கவே இல்லையே?

அந்தப் படத்தை இன்னைக்கு எடுத்திருந்தால் ஒரு வாரம்தான் ஓடியிருக்கும். அன்னைக்கு 3 சென்டர்கள்ல 100 நாட்கள் ஓடிச்சு. அன்று அந்தப் படத்தை எடுக்க ஆன செலவு ரூ.29 லட்சம். கிடைச்சது ரூ.35 லட்சம். அடுத்து நான் எடுத்த ‘சேரன் பாண்டியன்’ படத்துக்கு ரூ.33 லட்சம் செலவாயிடுச்சு. அது கோடிக்கணக்கில் லாபத்தை கொடுத்தது. நான் சினிமாவை வியாபாரமாகத்தான் பார்க்கிறேன். தர், பாலசந்தர், பாரதிராஜா மாதிரி நான் ஆகப்போவதில்லை என்று எனக்கு நன்றாகத்தெரியும். முதல் படம் அதுவாக அமைந்தது. அவ்வளவுதான்.

‘கபாலி’ படம் பார்த்தீர்களா?

பார்த்தேன். ‘இது உங்க படமாவும் இல்லை. இரஞ்சித் படமாவும் இல்லை. ஒரு டான் படத்துல ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கீங்க!’’ன்னு என்னோட அபிப்பிராயத்தை ரஜினியிடம் சொன்னேன்.

‘லிங்கா’ படத்தோட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சரியில்லை என்று அப்போது பலவிதமான விமர்சனங்கள் எழுந்ததே?

பைக், கார் வைத்து கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி வேண்டாம் என்பதில் ரஜினி தெளிவாக இருந்தார். அதுக்கு மாற்றாக கிளைடெர் வைத்து ‘சூப்பர் மேன்’ ஸ்டைலில் எளிமையாக ஷூட் செய்யவே திட்டமிட்டிருந்தோம். அதில் நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் இருந்தது. அதுக்கெல்லாம் ஒரு மாத காலம் அவகாசம் தேவைப் பட்டது. அப்போது அந்த அவகாசம் கிடைக்கவில்லை. அதுமட்டும்தான் அதுக்கு கார ணம். ஒன்றை அனுபவிக்க வேண் டும் என்று இருந்தால் அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதுதான் நடந்தது.

அடுத்து?

விஷால், லாரன்ஸ் இரு வருக்குமான கதைகள் பேச்சு வார்த்தையில்தான் உள்ளது. முடிவு செய்ய இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது. பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்