பிப்ரவரி 17-ம் தேதி லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' மற்றும் 'சிவலிங்கா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார். இப்படம் வெளியாகவிருந்த தருணத்தில் பணமோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதனிடமிருந்து சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி பிப்ரவரி 17ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளது.
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சிவலிங்கா'. இது கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, சரியான வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்தார்கள். தற்போது இப்படமும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளார்கள்.
ஒரே நாளில் லாரன்ஸ் நடிப்பில் 2 படங்கள் வெளியானால் எப்படி என விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, "கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் தான் வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago