இறுதிக்கட்டத்தில் தீபாவளி ரேஸ்

By கா.இசக்கி முத்து

அஜித்தின் ‘ஆரம்பம், கார்த்தி யின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', விஷாலின் 'பாண்டிய நாடு' ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசுக்கு தயாராகி நிற்கிறது. இந்த மூன்று முன்னணி நாயகர்களின் முந்தைய படங்கள் வசூலில் கொஞ்சம் பின்தங்கியதால் தீபாவளிக்கு வெற்றிச் சரவெடி அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தீபாவளிக்காக இப்படம் எப்படி தயாராகி வருகிறது என்று ஒரு சிறிய முன்னோட்டம். சினிமா பாஷையில் சொன்னால், டிரைலர்.

ஆரம்பம்

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டா ளத்தைக் கொண்டு விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 31ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அஜித் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் ‘தல’யின் மாறுபட்ட கதாபாத்திரத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கி றார்கள். இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு படத்தை திரையிடும் வேலைகள் நடந்து வருகின்றன.

அதே நேரத்தில் இப்படத்துக்கு ஒரு சிக்க லும் காத்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் 'கேடி' படத்தினை தயாரித்த போது வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதற்கு “படத் தின் தயாரிப்பாளர் நானில்லை. ரகுராம் தான்.” என்று கூறிவருகிறார் ஏ.எம்.ரத்னம்.

பொதுவாக அஜித் படம் என்றாலே வெளியான 4 நாட்களுக்குள் கல்லாப் பெட்டியை நிரப்பிவிடலாம். இதனால் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. இறுதியில் என்.எஸ்.சி ஏரியாவை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியது. 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிக்கல் இல்லாமல் வந்தால் இப்படம் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துதான்.

ஆல் இன் ஆல் அழகுராஜா

பாக்ஸ் ஆபிசின் சமீபத்திய செல்லப் பிள்ளை கார்த்தி. இதனால் இப்போதே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு 300 திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.

கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் நடிக்க 'காமெடி சரவெடி' இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். காமெடி வகை படங்களில் மகுடம் சூட்டிய ராஜேஷ் இப்படத்தில் இருப்பது கூடுதல் பலம். சந்தானம் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நகைச்சுவை ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்கிறது படக்குழு. படத்தொகுப்பு வேலைகள் முடிந்து, இதர பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறன. படத்தின் விநியோக உரி மையை பொறுத்தவரை எந்தொரு பிரச்னையுமில்லை. இதுவரை சுமார் 300 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு 50 திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அனைத் துமே முடிவு செய்தப்படி நடைபெற்றால் நவம்பர் 1ம் தேதி காமெடி சரவெடியாக அனைத்து இடங்களிலும் வெடிக்க இருக்கிறான் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'

பாண்டியநாடு

விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிக்க சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். விஷால் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தினை வேந்தர் மூவிஸ் வெளியிட முடிவு செய்திருக்கிறது. பொள்ளாச்சி யில் இப்போதுதான் படப்பிடிப்பு முடிந்து, இசை வெளியீடும் முடிந்திருக்கிறது. படத்தின் எடிட்டிங், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கிவிட்டதால் படத்தின் பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்