'துப்பாக்கி', 'சிங்கம் 2' படங்களில் வசூலை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முந்தியிருக்கிறது 'ஆரம்பம்' படத்தின் வசூல்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர் படங்களின் வசூல் இந்நாடுகளில் பெரியளவில் இருக்கும்.
'எந்திரன்', 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்', 'துப்பாக்கி' ஆகிய படங்கள் வரிசை அடிப்படையில் வசூலை அள்ளியிருக்கின்றன. தற்போது 'ஆரம்பம்' படத்தின் வசூல் 'துப்பாக்கி' படத்தினை முந்தியிருக்கிறது.
அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில்,அமெரிக்காவில் 5வது இடத்தினை பிடித்திருக்கிறது 'ஆரம்பம்'.
அதுமட்டுமன்றி, இப்போது திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால், கண்டிப்பாக படத்தின் வசூல் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுவரை தமிழ் திரையுலகில், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலைத் தொட்ட படம் 'எந்திரன்' மட்டுமே. 'சிவாஜி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ், சேனல் உரிமை, ஆடியோ உரிமை என எல்லாவற்றையும் சேர்த்து தான் 100 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago