தனது அடுத்து படத்திற்கு 'எஸ்கிமோ காதல்' என்று பெயரிட்டிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
தமிழ் திரையுலகில் காமெடி படங்கள் வரிசைக்கட்டிய நேரத்தில், ப்ளாக் காமெடி வகை திரைப்படத்தை அழகாக வழங்கினார் நலன்.
விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' என்ற ப்ளாக் காமெடி மூலம் இயக்குனரான நலன் குமாரசாமி, தனது அடுத்த படப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
நலன் சூர்யாவை சந்தித்து கதை சொல்ல, சூர்யா அதனை தனது '2டி எண்டர்டெயின்மண்ட்' நிறுவனம் மூலம் தயாரிக்கவும் திட்டமிட்டார். ஏற்கனவே லிங்குசாமிக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால், அப்படத்தினை முடித்துவிட்டு நலன் குமாரசாமி கதையில் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் சூர்யா.
இந்நிலையில் சூர்யா படம் தாமதமாவதால், 'எஸ்கிமோ காதல்' என்ற படத்தினை துவங்க இருக்கிறார் நலன் குமாரசாமி. இப்படத்தினையும் தயாரிக்கவிருக்கிறார் 'சூது கவ்வும்' தயாரிப்பாளர் சி.வி.குமார்.
யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. சென்னை மற்றும் பெங்களூரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். காமெடி கலந்த காதல் கதையாம் 'எஸ்கிமோ காதல்'.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago