ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. ராஜேஷ் இயக்கிய இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
அப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் ராஜேஷ். தான் உருவாக்கிய கதை சந்தானத்துக்கு பொருத்தமாக இருந்ததால், சந்தித்து கதையைக் கூறினார். கதை பிடித்துவிடவே இக்கூட்டணி இணைவது உறுதி செய்யப்பட்டது.
இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது, இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் 'மன்னவன் வந்தானடி', 'சக்கப் போடு போடு ராஜா', 'ஓடி ஒடி உழைக்கணும்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம், அப்படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
ராஜேஷ் படங்களில் சந்தானம் காமெடியான நடித்தவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது நாயகனாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago