தொடங்கியது ஜெயம் பிரதர்ஸ் படப்பிடிப்பு!

By ஸ்கிரீனன்

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கியது.

'ஜெயம்', 'எம்.குமரன் S/O மகாலட்சுமி', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா. இம்மூன்று படங்களுமே வரவேற்பை பெற்றிருப்பதால், இவர்களது இணைப்பில் உருவாகும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

'பூலோகம்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் ஜெயம் ரவி.

ஜெயம் ராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னை பின்னி மில்லில் துவங்கியது. நயன்தாராவும் இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, ஆர்ட் டைரக்டராக செல்வாவும் பணியாற்றி வருகிறார்கள்.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை என்கிறார் ஜெயம் ராஜா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்