நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடனான 5 நாட்கள் சந்திப்பு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. முதல்நாள் சந்திப்பின்போது 'ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என அவர் கூறியிருந்தது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை எழுப்பியது.
இதுதொடர்பான கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Vincent Raj
ரஜினிக்குள் இரண்டு ரஜினி இருக்கிறார். சினிமா ரஜினி, ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி. நிஜ ரஜினி, நூறு தடவை சொன்னாலும் ஒரே தடவை சொன்னதுதான். ஆக அவர் சரியாகத்தான் இருக்கிறார்.
அரசியலுக்காக சினிமாவை பயன்படுத்தியவர் எம்ஜிஆர். சினிமாவுக்காக அரசியலை பயன்படுத்துபவர் ரஜினி.
ஜான்ஸ் டேவிட் அன்டோ
ரைட் இன்டிகேட்டரை போட்டு, லெப்ட்ல கையை காட்டி ஸ்ட்ரெய்ட்டா போய்ட்டே இருப்போம் மொமண்ட். ஸ்டாலின் சிறந்த நிர்வாகி- ரஜினி.
Thiruppathi Kannan
ரஜினி அரசியலுக்கு வரட்டும் வராமல் போட்டும், ஆனா வரக்கூடாதுனு எதிர்க்கும் போதுதான் யோசிக்கத் தோணுது. தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
Shaik Sulaiman
அனைவரும் அவரவர் கடமையைச் செய்யுங்கள் போர் வரும்பொழுது பார்க்கலாம்: நடிகர் ரஜினி.
போங்க சார் பேசாம உங்க ரசிகர்கள், அவங்க புள்ளைங்க எல்லாம் டென்த் ரிசல்டு பார்த்துட்டு இருக்காங்க. இப்பவும் அதே காமெடி பண்ணிக்கிட்டு!
Trichy K Shiva
அரசியலில் குதிக்கிறார் ரஜினி- செய்தி.
பார்த்து குதிங்க ஜி. இது மாறி நிறைய பேர் குதிச்சி கை, கால் உடைஞ்சி கிடக்கிறாங்க..!
Pollachi Srinivasa Kumar
ரஜினி : நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் தான் முடிவெடுக்கணும்!
#கடவுள் : - காவிரி பிரச்சினைல வாயை திறந்தீங்களா ?
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - விவசாயிகளுக்கு ஆதரவு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - ஜல்லிக்கட்டு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - மீத்தேன் எதிர்ப்பு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - மணல் கொள்ளை தடுப்பு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - நீட் தேர்வு எதிர்ப்பு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - கட்டாய இந்தி எதிர்ப்பு!
#ரஜினி : - இல்லை!
#கடவுள் : - அப்புறம் எதுக்கு நான் முடிவெடுக்கனும்...!
Gana Pathi
ரஜினி மக்களுக்கு என்ன செய்தார், அவர் அரசியலுக்கு என்ன தகுதி இருகிறது என்று கேட்பவர்களுக்கான பதிவு..
* கபாலி படத்துல அனாதை குழந்தைங்களுக்குஸ்கூல் ஆரம்பிச்சி இருக்காரு..
* எந்திரன் படத்துல இந்திய ராணுவத்துகாக ரோபோ செஞ்சி இருக்காரு..
* சிவாஜி படத்துல கள்ள நோட்டை ஒழிச்சி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி குடுத்து, வேலையில்லாதவர்களுக்கு வேலை குடுத்து இருக்காரு..
* முத்து படத்துல தன் சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்திருக்காரு..
* வீரா படத்துல திருட்டு விசிடிய ஒழிச்சி இருக்காரு.
Aranga Gunasekaran
நீங்களும் நானும் பிரிந்து நிற்கும்வரை ரஜினி மட்டுமல்ல அமிதாப் பச்சனே தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவார்.
Kala
ஒரு நல்ல தலைவன் துணிச்சலோடு செயல்பட வேண்டும். சிக்கலான வேளையில் தீர்க்கமான முடிவு தேவை. குழப்பம் கூடவே கூடாது. பயம் என்பது கடுகளவும் ஆகாது.
அரசியலுக்கு வரலாமா வேண்டாமானு இத்தனை வருடங்களாய்க் குழம்பிக் கொண்டிருக்கும் ரஜினி வந்து மட்டும் என்ன சாதித்து விடப் போகிறார்? வருகிறேன் அல்லது வரவில்லை என இரண்டில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடலாமே.. ரசிகர்களும் ஏமாற மாட்டார்கள். எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.
நிஜத்தில் ஹீரோ ஆவது சாதாரணமல்லவே..!
வெ. பூபதி
ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லியோ, அரசியல் ரஜினி பக்கத்துல வந்து காத்துகிட்டு இருக்கு!
உளவாளி (@withkaran)
ரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வரணும்..
சம்பாதிச்ச பணத்த கொஞ்சம் செலவு பண்ணி தேர்தல்ல தோற்று தன் மக்கள் செல்வாக்க புரிஞ்சுக்கவாவது..
Yuvan Swang
நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை. - ரஜினி.
நல்ல விஷயம்தான். ஆனால் ரஜினி 25 நிகழ்ச்சியில் பத்து ரூபா கோகோகோலாவை முப்பது ரூபாய்க்கு வித்ததை நினைக்கும் போது கொஞ்சம் இடிக்குது.
Dhana Vijayan Devamsam
ரஜினி அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை... வெற்றி தோல்வியை மக்கள் முடிவு செய்யட்டும். இனம், மொழி, ஜாதி, பிறப்பு, தொழில் கொண்டு ஒருவரைத் தரம்பிரிக்க நாம் யார்?
Kamaraj Azariah
ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்றதும், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்னு சொல்றதும் ஒண்ணுதான்...
இரண்டும் கனவுல கூட நடக்காது.
Shanmugam Rajavel
எந்த பொறுப்பு கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுவேன் - ரஜினி.
கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணியைக் கொண்டு வரணும், முடியுமா பாஸ்?
Thirunavukkarasu Thiruneelakantan
தன் தலைவர்களின் ஊழலை, செயலற்ற தன்மையை, தீச்செயலை கண்டிக்க மனமில்லாதவர்கள், ரஜினி மீது போலி அறச்சீற்றம் காட்டி தங்கள் வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.
Vaa Manikandan
ரஜினிக்கு தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? தமிழனின் முக்கியமான பிரச்சினைகளில் அவரது நிலைப்பாடுகள் என்ன? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு ‘நீ அரசியலுக்கு வரக் கூடாது’ என்று சொல்ல வேண்டியதில்லை. இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகளில் யார் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள்?
முக்கால்வாசி ஆட்கள் சொத்து சம்பாதிக்க அரசியல் நடத்துகிறார்கள். மீதமிருக்கிறவர்கள் இருக்கிற சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் நடத்துகிறார்கள்.
Boopathi A
ரஜினி அரசியலுக்கு வந்தால் நம்மாளுங்க விஜயகாந்தை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு ரஜினிய மீம்ஸ்க்கு அட்மிட் பண்ணிடுவாங்க. அவ்ளோ தான்!
Aravind @aravindjothi1
எல்லாரிடமும் ஒரு திறமை இருக்கும். ஆனால் உலகம் அவர்களை பிழைகள் கொண்டே அடையாளம் காணும். தன்னை வெறுக்கும் நபரையும் அன்பாய் நினைக்கும் தலைவர் ரஜினி.
ElavarasanThangasamy @elasan89
அரசியலுக்கு வந்து சம்பாதிச்சவங்க நிறைய பேர்..
ஆனால் அரசியலுக்கு வருவேன்னு சொல்லியே சம்பாதிச்சவர் ரஜினி மட்டுமே போல!
கார்த்தி @idumbaikarthi
7 வயது சிறுவன் மதுவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், 67 வயது ரஜினி தனது செயல்களுக்கு கடவுளைத் துணைக்கு அழைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago