ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘குக்கூ’ திரைப்படம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரைச் சுற்றிச் சுழலும் காதலை மையமாக கொண்ட கதை. இப்படியொரு காதல் தமிழ்த்திரைக்கு இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் காதல் காட்சிகள் மிக இயல்பாக, யதார்த்தம் ததும்ப படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
ரயில் நிலையத்தை களமாகக் கொண்டு படமாக்கிய ஒரு காட்சியில், நாயகன் தமிழ் மீது நாயகி சுதந்திரக்கொடிக்கு காதல் மலர்கிறது. அப்போது, அவனக்கு ஆசையாக ஒரு பெர்ஃப்யூம் வாங்கிக் கொடுக்கிறாள். அடுத்தடுத்து சந்திக்க வரும்போது அந்த பெர்ஃயூம் மணத்தை வைத்து காதலன் வந்திருப்பதைப் பார்வையில்லாத அவள் கண்டுபிடிப்பதற்காகவே அப்படிச் செய்கிறாள். அந்த பெர்ஃப்யூம் காட்சி வரும் ஒவ்வொரு இடத்திலும் தனித்த தீம் இசை ஒன்றை பின்னணியில் சேர்த்திருக் கிறார்கள். அதாவது, அந்த பெர்ஃப்யூம் மணம் இசையாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். அந்த பிரத்யேக இசை வந்துவிட்டால் காதலன் வந்துவிட்டான் என்று எண்ணி அவன் அருகில் காதலி வந்து பேசுவாள். அவள் பேசிய பின்னர்தான் தெரியும் அங்கே வந்திருப்பவன் காதலன் இல்லை, அவனுடைய விடுதி நண்பர்களில் ஒருவன் என்பது.
அடுத்து ஒரு இடத்தில் அந்த இசை வரும். அங்கே ஆசை ஆசையோடு சென்று, இவன் நிச்சயம் தன் காதலன் தமிழ்தான் என்று பேசத் தொடங்குவாள். அவரோ, விடுதியின் பாதுகாவலராக இருப்பார். அவளுக்குத் தமிழ் மீது கோபம் கோபமாக வரும். அந்த பெர்ஃப்யூமை தமிழைத் தவிர, அவனது அறை நண்பர்கள் தொடங்கி பாதுகாவலர் வரைக்கும் உபயோகித்திருப்பார்கள். ரொம்பவே கோபத்தோடு இருக்கும் காதலி அருகில் ஒரு கட்டத்தில் தமிழ் வரும்போது அவன் மேல் பெர்ஃப்யூம் மணம் வராது. அவள், அவனிடம் காரணம் கேட்டு ஊடல் கொள்கிறாள். அந்த ஊடலின் நடுவே அழகான காதல் அரும்புவதோடு அந்த காட்சி முடிகிறது.
இதில் காதலன் தமிழாக தினேஷும், காதலி சுதந்திரக்கொடியாக மாளவிகாவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள், இருவரைத் தவிர அந்த காட்சியில் வரும் மற்ற எல்லோரும் நிஜத்திலும் பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகள். இந்த காட்சியே அவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் சொன்ன விஷயத்தை வைத்துத்தான் படமாக்கியதாக கூறுகிறார், இயக்குநர் ராஜூமுருகன்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago