சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க, புதிய படமொன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு', 'ஆட்டோகிராப்', 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சேரன். சிறந்த படம் என்பதற்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.
2015ம் ஆண்டு 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' என பெயரிடப்பட்ட படத்தை இயக்கினார். அப்படத்தை வெளியிட பெரும் சிரமம் ஏற்பட்டதால், C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் சி.டி விற்பனையாக இப்படம் வெளியானது.
அதற்குப் பிறகு படம் இயக்காமலே இருந்துவந்தார். தன்னிடம் பெரிய நடிகர்கள் யாருமே கதை கேட்பதில்லை என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக சாடியிருந்தார் சேரன். மேலும், பொருளாதார ரீதியாகவும் அவருக்கு சில கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
சேரனின் நிலையைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதை விவாதம் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சேரன்.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதிபதியின் இச்செயல் பெரிய நடிகர்களின் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago