கோச்சடையான் பாடல் பிப்ரவரி 28-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் மகள் இயக்கியுள்ள 3-டி அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி நடக்க உள்ளது.

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, நாசர் ஆகியோர் நடித்துள்ள 'கோச்சடையான்' படம் ஏப்ரல் 11-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் சிறப்பு.

அதேபோல ஷோபனாவும், ரஜினியும் இணைந்து நடனமாடும் போட்டிப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் சிவசங்கரின் மகன்கள் அஜய், விஜய் இருவரும் நடனம் அமைத்துள்ளனர். இந்த படத்தின் முழுப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

‘கோச்சடையான்’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் நிலையில், இசை வெளியீடு குறித்த செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்