விரைவில் தொடங்கவிருக்கும் சி.சி.எல் போட்டிகளில், சென்னை அணிக்கு விளம்பர தூதராக த்ரிஷா அறிவிப்பு.
சி.சி.எல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, கர்நாடகா, இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்று வருகின்றன.
விரைவில் 4ம் ஆண்டு சி.சி.எல் போட்டிகள் துவங்கவிருக்கிறது. இந்தாண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இப்போட்டிகளை துவக்கி வைக்கிறார். இதற்காக அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தாண்டு சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இம்முறை சென்னை அணிக்கு த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து சென்னை அணி சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை அணிக்கு விளம்பர தூதராக த்ரிஷா இருப்பார். அவரை விளம்பர தூதராக கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்." என்று தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு ஆண்டுகள் சென்னை அணியும், மூன்றாம் ஆண்டு கர்நாடக அணியும் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago