‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் காமெடி கலாட்டா ’ஆல் இன் ஆல் அழகுராஜா’.
இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் சந்தானம் ஒரு காட்சியில், அரசின் புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி அமைந்திருந்தது.
இக்காட்சி குறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. மேலும் குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது.
புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் தான் என்று அக்காட்சிக்கு விளக்கமளித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அக்காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ராஜேஷ் அறிவித்துள்ளார். அப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago