அஜித் - கெளதம் படத்தில் பிரபல கதையாசிரியர்

By ஸ்கிரீனன்

இந்தி திரையுலகில் பிரபல கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவன், கெளதம் மேனனோடு இணைந்து அஜித் படத்தில் பணியாற்ற இருக்கிறார்.

'வீரம்' படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். மார்ச் 18ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படத்தில் கெளதம் மேனனோடு இணைந்து ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இவர் இந்தியில் பிரபல கதையாசிரியர் ஆவார். காக்கி, ப்ளஃப் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். அதுமட்டுமன்றி சி.ஐ.டி என்ற இந்தி நாடகத்திற்கும் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீதர் ராகவன் தனது ட்விட்டர் தளத்தில் "அஜித் நடிக்கும் படத்திற்காக கௌதம் மேனனுடன் அருமையான கதை விவாதத் தருணங்கள். மிக சுவாரஸ்யமாக வந்திருக்கிறது.முக்கியமாக அற்புதமான கூட்டணி" என்று தெரிவித்து இருக்கிறார்.

அஜித் நடிக்கவிருக்கும் இப்படம் ஒரு போலீஸ் கதையாகும். ஸ்ரீதர் ராகவன் ஏற்கனவே பல்வேறு போலீஸ் படங்களுக்கு கதை பணிகளில் ஈடுபட்டு இருந்ததால், கெளதம் மேனன் இவரை தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்