ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'போகன்' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'போகன்'. பிரபுதேவா தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்று, சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தார்கள். 2015-ம் ஆண்டின் டிசம்பர் வெளியீடாக இப்படம் தயாரானது.
இறுதியாக, பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். இதனை முன்வைத்து படத்தையும் விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சி 3' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள்.
இதனால் 'சி 3' படத்தை முன்வைத்து, 'போகன்' தங்களுடைய வெளியீட்டை பிப்ரவரி 2-ம் தேதி மாற்றியமைத்துள்ளார்கள். இதனை படக்குழுவினர் தங்களுடைய சமூகவலைதளத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago