சங்கமித்ரா அப்டேட்: முக்கிய நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்தின் முக்கிய நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுந்தர்.சி. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் நாயகனாக நடிப்பதற்கு 250 நாட்கள் கால்ஷீட் தேதிகள் வேண்டும் என்பதால் முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் தயங்கினார்கள். இறுதியாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 'சங்கமித்ரா' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்துக்கு இதர நாயகிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் நாயகிகளுக்காக தீபிகா படுகோன் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், முக்கியமான பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனது கதாபாத்திரத்துக்காக பல்வேறு பயிற்சிகளை ஸ்ருதிஹாசன் கற்றுக் கொள்ளவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் கலை இயக்குநராக சாபுசிரில் பணியாற்ற இருக்கிறார். கமலக்கண்ணன் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 'பாஜிராவ் மஸ்தானி' ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்திய அளவில் படத்தின் தயாரிப்பு செலவுகளில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

மேலும்