செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார் நந்திதா. ‘‘எதிர்பார்க்காத வேடம். ஆனா, பலரும் நந்திதாவுக்கு இதில் நெகடிவ் ரோல்னு எழுதுறாங்க. அப்படியெல்லாம் இல்லை. இப்போ வரைக்கும் நாங்க யாரும் எங்கேயும் இதுதான் எங்க கதாபாத்திரம்னு சொன்னதில்லை. இதுவரை இதுபோல ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைச்சதில்லை. இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்!’’ என்று புன்னகைக்கிறார் நந்திதா. தொடர்ந்து அவரோடு உரையாடியதிலிருந்து..
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு முன் ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற் கான வேலைகள் நடந்து வருகிறதே?
அடுத்த மாதம் ரிலீஸாகிறது. ‘உள் குத்து’ படத்தோட இயக்குநர் கார்த்திக் ராஜூ நல்ல நண்பர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனக்கு என்ன வேடம்னு கேட்டேன். நாகர்கோவில் பகுதியில் துணிக்கடையில் வேலை பார்க்கிற பெண் வேடம்னு சொன் னாங்க. ‘அட்டகத்தி’ படத்துக்கு பிறகு நானும், தினேஷும் சேர்ந்து நடித்த படம். ரசிகர்கள் வரவேற்பாங்கன்னு நினைக்கிறேன்.
செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யான்னு இரண்டு சிறந்த கலைஞர்களோடு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
தமிழ்ல எட்டு படங்களுக்கு மேல நடிச்சாச்சு. செல்வராகவன் சார் நடிகர்கள்கிட்ட வேலை வாங்கற விதமே வித்தியாசமா இருந்தது. படத்தில் நடிக்கத் தொடங்கறதுக்கு முன்னாடி எல்லாரும் பயமுறுத்தினாங்க. ஆனா, செல்வராகவன் படத்துல கத்துக்கிட்ட விஷயங்கள் எக்கச்சக்கம். முதல் நாள் ஷூட்ல இருந்து கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் ஏதாவது ஒண்ணு கத்துக்கிட்டே இருந்தேன்னும் சொல்லலாம். அதேமாதிரிதான் எஸ்.ஜே. சூர்யாவும். அடிப்படையில் அவரும் ஒரு இயக்குநர். ஆனா, இந்தப்படத்துல நடிகர் என்ற பரிமாணத்தை மட்டுமே வெளிக்காட்டினார்.
நான், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மூணு பேரோட காம்பினேஷன் காட்சிகள் ரொம்பவே பேசப்படும். விரைவில் டீஸர் வரப்போகுது. அதுக்காகத்தான் காத்திருக்கேன்.
‘அட்டக்கத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங் கள்ல இருந்து இப்போ நடிக்குற ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வரைக்கும் இரண்டு ஹீரோயின் கதைகளை அதிகம் தேர்வு செய்து வர்றீங்களே? என்ன காரணம்?
நான் நடித்த இரண்டு நாயகிகள் சப்ஜெக்ட் படங்கள் எல்லாமே ஹிட் ஆகியிருக்கு. அது என்னோட அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். படத் துல இன்னொரு ஹீரோயின் இருக் காங்களேன்னு நான் எப்பவுமே கவலைப்பட்டதில்லை. என்னோட ரோல் என்ன சொல்ல வருது. அதை எப்படி கவனமா செய்யறதுங் கிறது மட்டும்தான் என்னோட இலக்கு.
தெலுங்கு படங்கள்லயும் தடம் பதிச்சிட்டீங்களே?
கடந்த 2 வருஷத்துக்கு மேல தெலுங்குல வாய்ப்புங்க தேடி வர ஆரம்பிச்சது. சரியான நேரத்துல இறங்குவோம்னு இருந்தேன். நல்ல கதாபாத்திரம் கிடைத் தது. அதான் உடனே ஓ.கே சொல்லிட்டேன். ஆனந்த் இயக்கத்துல நிகில் சித்தார்த் ஹீரோ. நல்ல கதை. அப்போ இது சரி யான நேரம்தானே. இனிமே.. தமிழ், தெலுங் குன்னு ரெண்டு மொழி கள்ல யும் கவனம் செலுத்த வேண்டியதுதான்.
விலங்குகள் பாதுகாப்புக் காக குரல் கொடுப்பது, குழந்தைகளை தத்தெடுப்பது என்று நாயகிகள் சிலர் சமூக ஆர்வலர்களாக இருப்பது ஒருவித விளம்பரம்னு விமர் சனம் வருதே?
நானும் பள்ளி குழந்தை களை படிக்க வைப்பதில் தொடங்கி உடல் உறுப்புகள் தானம் வரைக்கும் பலவிதமான சமூக சேவை விஷயங்களில் ஈடுபட்டு வர்றேன். ஆனா, அதை ஒருபோதும் விளம்பரத்துக்கு பயன் படுத்த விரும்பியதில்லை. அது தேவையில்லைன்னும் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மற்ற யாரும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம். அதை நான் விமர்சனம் செய்ய முடியாது. எனக்கு எப்படித் தோணுதோ அதைத்தான் நான் செய்ய வேண்டும். அப்படித்தான் செய்துட்டும் இருக்கேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago