இரும்புத்திரை அப்டேட்: ஆர்யா விலகல்; அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை

By ஸ்கிரீனன்

'இரும்புத்திரை' படத்திலிருந்து ஆர்யா விலகவே, அவருக்கு பதிலாக அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு 'இரும்புத்திரை' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வில்லனாக முதலில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்தது படக்குழு. ஆனால் அமீர் இயக்கத்தில் உருவாகும் 'சந்தனத்தேவன்' படப்பிடிப்பு தேதிகளும், 'இரும்புத்திரை' படப்பிடிப்பு தேதிகளும் ஒன்றாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 'இரும்புத்திரை' படத்திலிருந்து விலகினார் ஆர்யா.

ஆர்யாவுக்கு பதிலாக வேறொரு நடிகரைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டியது படக்குழு. தற்போது அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

விரைவில் 'துப்பறிவாளன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் விஷால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்