சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இன்று காலை மதுரையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு தனது ஒவ்வொரு படத்தினையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசூல், திரையுலகின் பலரது புருவத்தினை உயர்த்தியது.
பெரியதிரைக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.
பிரசவத்திற்காக ஆர்த்தி மதுரையில் அவரது வீட்டில் தங்கியிருந்தார். 'மான் கராத்தே' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இன்று காலை ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்பாவனா சந்தோஷத்திலும், பிரபலங்கள் வாழ்த்திலும் நனைந்து வருகிறார் சிவகார்த்திகேயன் .
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago