இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி

By ஸ்கிரீனன்

இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியம் இணைந்து தயாரிக்கும் 'வசந்தகுமாரன்' படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

சூர்யா, ஜோதிகா மற்றும் பலர் நடிக்க 'பி ஸ்டூடியோஸ்' மூலம் பாலா தயாரித்த படம் 'மாயாவி'. சிங்கம்புலி இயக்கினார். அப்படத்தினைத் தொடர்ந்து பாலா தயாரித்த படம் 'பரதேசி'.

வேறு ஒரு இயக்குநர் இயக்கும் படத்தை பாலா தயாரித்து நீண்ட நாட்கள் ஆகிறது. தற்போது பாலாவின் 'பி ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'ஸ்டூடியோ 9 புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் இணைந்து 'வசந்தகுமாரன்' என்ற புதிய படத்தினை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது. நாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளதாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்