திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆனதையொட்டி, விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 1992ல் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நாளைய தீர்ப்பு' என்ற படம் 4, டிசம்பர் 1992ல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் திரைப் பயணம் நகரத் துவங்கியது. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், 'திருமலை' என்ற படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக முன் நிறுத்தியது.
இன்று விஜய் நாயகனாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாட அவரது ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளங்களில் விஜய் நடித்த படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (@vijay_cjv) வலைத்தளத்தில், " திரையுலகிற்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாயகனாக அறிமுகமான காலகட்டங்கள் நினைவில் இருக்கின்றன.
இந்த மறக்கமுடியாத நாளில் நான் என்னுடைய குடும்பம், என்னுடைய படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் எனது அன்பார்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago