ஆர்யா, ஜிவா படங்கள் : சந்தோஷத்தில் ராஜேஷ்

By ஸ்கிரீனன்

ஆர்யா, ஜிவா இருவரது படங்களுக்கும் ஒரே நேரத்தில் கதை எழுதிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்த படத்தின் மூலம், தன்னை நிரூபிக்கத் தயாராகி விட்டார் இயக்குநர் ராஜேஷ்,

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யா, 'சிவா மனசுல சக்தி' படத்தில் ஜிவா ஆகியோரை இயக்கியவர் ராஜேஷ். தற்போது மீண்டும் இருவரையும் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

முதலில் ஆர்யா நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார். இப்படத்திலும் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜிவா நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார்.

தற்போது ஆர்யா, ஜிவா இருவருமே வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருக்கும் வேளையில், ராஜேஷ் இருவரின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார். இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கும் ராஜேஷ், இவ்விரண்டு படங்கள் மூலம் விட்ட இடத்தினைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறாராம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்