ஆரம்பம் படத்திற்கு க்ளீன் யூ!

'ஆரம்பம்' படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தீபாவளி ரேஸில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆரம்பம்’. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இணையத்தில் வெளியான ‘ஆரம்பம்’ புகைப்படங்களில் அஜித் போலீஸ் உடை அணிந்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. இணையத்தில் 'ஆரம்பம்' படத்தினைப் பற்றி அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது #Arrambam என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகிறது. இன்று சென்சார் என்பதால், #Arrambamcensorday என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு இன்று காலை திரையிட்டு காட்டினார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தீபாவளி படங்களில் முதலில் சென்சார் ஆகியிருப்பது 'ஆரம்பம்'. ஆகையால் இம்மாத இறுதியில் 31ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE