பழம்பெரும் திரைப்பட இயக்குநர் மித்ரதாஸ் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 103.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஆண்டனி மித்ரதாஸ், கடந்த 17-ம் தேதி அண்ணாநகர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பில் அடிபட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மித்ரதாஸ் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவருக்கு எலிசபெத் என்ற மனைவியும், உஷா என்ற மகளும் உள்ளனர். மித்ரதாஸின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மித்ரதாஸின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மித்ரதாஸ், தனது 27-வது வயதில் ‘தயாளன்’ என்ற படத்தை இயக்கிய தன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் பி.யு.சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் ஆகியோர் நடித்தனர். அடுத்து ‘பிழைக்கும் வழி’ என்ற படத்தை இயக்கினார். மலையாளத் தில் ‘பால்யசகி’, ‘ஹரிச்சந்திரா’ உள்ளிட்ட படங்களை இயக்கி யுள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் மொத்தம் 7 படங்களை இயக்கியுள்ளார்.கடைசியாக கடந்த 1960-ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ‘சிவகாமி’ படத்தை இயக்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago