சமூக அக்கறை மிகுந்த இடத்தில் ‘பஞ்ச்’ வைக்கணும்!- இயக்குநர் பரதன் நேர்காணல்

By மகராசன் மோகன்

‘‘இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது’’ன்னு ‘பைரவா’ படத்துல விஜய் ஒரு வசனம் பேசுவார். இது படத்துக்காக மட்டும் எழுதினது இல்ல; விஜய் சாரின் நிஜ கேரக் டரும் அதுதான்.

விஜயா புரொடக்‌ஷன்ல கதை சொல்லி ஓகே ஆனதும், சார்கிட்டப் போய் கதை சொன்னப்போ, ‘உடனே இதை நாம பண்ணுவோம்ணா’ என்றார். ஒருமுறை வாக்கு கொடுத்துட்டா, எவ்வளவு சீக்கிரம் அதைச் செய்ய முடியும் என்பதில்தான் அவரோட முழு கவன மும் இருக்கும். எல்லா விஷயங்களிலும் அவர் அப்படித்தான். அதனால்தான் படத்தில் இந்த வசனத்தை வைத்தேன்’’ என்கிறார் இயக்குநர் பரதன்.

‘பைரவா’ விஜய்யின் 60-வது படம். ‘கில்லி’, ‘மதுர’, ‘அழகிய தமிழ்மகன்’ என வசனகர்த்தாவாக, இயக்குநராக விஜய்யுடன் பயணித்த பரதனின் படம் இது. அவருடன் ஒரு நேர்காணல்..

‘பைரவா’ பொங்கல் ரேஸில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு படத்தை யும் பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?

பட ஷூட்டிங் முடிந்து டப்பிங் தொடங்குற துக்கு முன்னாடி, ‘ஃபர்ஸ்ட் ஆஃப் மட்டும் பார்த்துக்கட்டுமா?’ என்று விஜய் சார் கேட் டார். அவர் தன்னோட எல்லா படங்களையும் வழக்கமாக இப்படிப் பார்ப்பார். முதல் பாதியை பார்த்துவிட்டு திருப்தியோட வந்து, அடுத்த நாள் முதல் டப்பிங் பேசினார். அதேமாதிரி, செகண்ட் ஆஃப் டப்பிங் தொடங்கும்போது, ‘படத்தை பார்த்துடுறீங் களா?’னு கேட்டேன். ‘வேண்டாம். நேரா டப்பிங் போயிடலாம்ணா’ என்றார். அப்படி சொன்னப்போ எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்ல. பிறகு டப்பிங், எடிட்டிங், மியூசிக் முடிந்து படத்தைப் பார்த்துட்டு ‘பட்டையை கிளப்புது!’ என்றார். இதைக் கேட்டு மிகவும் உற்சாகமாகிட்டோம். ரசிகர்களும் கண்டிப்பா அதே கொண்டாட்டத்தை உணர்வாங்க.

மாஸ் ஹீரோ நடிக்கும் படத்துக்கு கதை எழுதும்போது பாட்டு, பஞ்ச் வசனம், சண்டை போன்ற இடங்களில் மெனக்கெடும் அளவுக்கு கதையில் கவனம் செலுத்த முடியாதே?

‘கில்லி’ படம் பண்ணும்போது விநியோ கஸ்தர் ஒருவர், ‘‘ஏ,பி,சி-ன்னு இல்லாம எல்லா ஏரியாவுலயும் விஜய் படம் பெரிய அளவுல ஹிட் அடிக்குது’’ என்றார். அதை மனசுல வச்சுத்தான் ‘கில்லி’ பட ஓபனிங்ல, ‘அந்த ஏரியா, இந்த ஏரியான்னு இல்லை. எல்லா ஏரியாவுலயும் ஐயா கில்லிடா!’ன்னு வசனம் எழுதினேன். சமீபத்துல விஜய் படங்கள் வசூல்ரீதியாக பட்டையக் கிளப்பிட்டிருக்கு. இதையும் ‘பைரவா’ படத்துல குறிப்பிட்டிருப்பேன்.

‘நீ என்ன பெரிய வசூல் மன்னனா?’ என்று வில்லன் கேட்பார். அதுக்கு விஜய், ‘அப் படித்தான் பேசிக்கிறாங்க!’ என்பார். இந்த மாதிரியான மாஸ் வசனங்கள் பெரிய ஹீரோக்களுக்கு கட்டாயம் தேவை. அதே நேரத்தில் அது சமூக பொறுப்புள்ள இடத்தில் இடம்பெற்றால்தான் ஹிட்டாகும். விஜய் சார் மாதிரியான நடிகர்களோடு பணிபுரி யும் போது இப்படி பல யோசனைகளோடு தான் கதையை உருவாக்குகிறோம். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாமே?

நாயகி கீர்த்தி சுரேஷ் ஒரு சிக்கலில் மாட் டிக்கொள்கிறார். அதில் இருந்து அவரை விஜய் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. நம் தமிழ் சமூகம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலாச்சார பின்னணி கொண்ட சமூகம். ‘சின்னத்தம்பி’, ‘சந்திரமுகி’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘மண்வாசனை’, ‘இறுதிச்சுற்று’ என்று பல படங்கள் பெண் சார்ந்த கதைக் களத்தோடு அழுத்தமான பதிவாக இருந்துள்ளன. கவர்ச்சி, பாடலுக்காக மட்டுமே நாயகிகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. படத்தில் மலர்விழி என்ற பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷின் பங்களிப்பு தனித்து நிற்கும்.

விஜய் படங்களில் அரசியலில் ஆர்வம் இருப்பது மாதிரியான வசனம் இடம்பெறும். இந்தப் படத்தில்?

இது அரசியல் பேசும் படம் அல்ல. அத னால் அரசியல் இருக்காது. மக்களின் பிரச் சினைக்காக குரல் கொடுக்கும் ஒரு நலன் விரும்பியாகத்தான் அவர் வெளிப்படுவார். படப்பிடிப்பிலும்கூட அவர் அரசியல் பேசிய தில்லை. ஆனால், நாட்டு நடப்பை கூர்ந்து கவனிப்பார். சமூக அக்கறை அதிகம் உண்டு. அந்தக் குணம் படத்தில் அதிர்வலையாக பல இடங்களில் வெளிப்படும்.

படத்தில் இடம்பெற்ற ‘வரலாம்.. வரலாம் வா பைரவா’ பாடல் வெளிவந்ததும் சில விமர்சனங்கள் எழுந்ததே?

இங்கு எதையும் விமர்சிக்கலாம். ஆனால், ஒரு தெளிவோடு செய்ய வேண் டும். அந்தப் பாடலை விமர்சித்தவரே சமீபத் தில், ‘நான் இடியட் மாதிரி சொல்லிட்டேன். படத்துல அந்தப் பாட்டுதான் ரொம்ப பிடிச் சிருக்கு’ன்னு பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாகிட்ட வருத்தம் தெரிவிச்சிருக் கார். தவறை உணர்ந்ததே போதும். ஆனால், அவசரப்பட்டு சொல்வதற்கு முன்பே இதை யோசித்திருக்கலாமே. அந்தப் பாடல்தான் இப்போது வரைக்கும் 30 லட்சம் பேர் கடந்து கேட்கப்படும் பாடலாக இருக்கிறது.

விஜய் படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வரும் நீங்கள் அஜித் நடித்த ‘வீரம்’ படத்துக்கு எழுதின வசனமும் பேசப் பட்டதே?

அஜித் சார் எனக்கு நேரடியாக பழக்கம் இல்லை. சிவா சார் அழைத்து, ‘நீங்க எழுதுங்க’ என்றார். அஜித் சார், விஜயா புரொடக்‌ஷன் கூட்டணின்னு வேலை செய்வதற்கே பெருமையாக இருந்தது. அடிப்படையில் நானும் ஒரு விவசாயி. பொள்ளாச்சிக்காரன். ‘வீரம்’ படமும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் பின்னணிக் கதை. அண்ணன், தம்பிகளோட அந்த வாழ்வியலைப் பதிவு செய்வது எளிமையாக இருந்தது. படத்தில் அஜித் சார், ‘நமக்கு கீழே இருக்கிறவங்கள நாம பார்த்துக்கிட்டா நமக்கு மேலே இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்’னு ஒரு இடத்துல சொல்வார். அது பெரிய அளவுல பேசப்பட்டது. இதேமாதிரி அந்தப் படத்துக்காக இன்னும் 10 பஞ்ச் வசனங்கள் எழுதினேன். படத்தின் நீளம் காரணமாக பயன்படுத்த முடியலை. அடுத்தடுத்த படங்களில் அதெல்லாம் இடம்பெறும்!

விஜய்யுடன் இயக்குநர் பரதன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்