பாடகி சுதித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் தனுஷ் குறித்த சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான தொடர் ட்வீட்களால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, "இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டார்.
மேலும் சில ட்வீட்டுகளில், தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலைக் காட்டுங்கள் என்றும், தனுஷ் என்னிடமிருந்து தள்ளி இருங்கள் என்றும் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''சுச்சியின் ட்விட்டர் பக்கத்தில் விஷமிகள் ஊடுருவியதால், எங்கள் குடும்பமே மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம்.
அவரின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சுச்சியின் ட்விட்டரில் வெளியான செய்திகள் அனைத்துமே பொய்யானவை.
இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், உரிய முறையில் செய்தியாக்க வேண்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பிய போது, தனது செல்ஃபி ஒன்றைப் பதிவேற்றி, அந்த ட்வீட்டுகளை நான்தான் பகிர்ந்தேன் என்று சுசித்ரா உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago