பாண்டிராஜ் - சிம்பு : துவங்கியது படப்பிடிப்பு!

By ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது!

'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று துவங்கியிருக்கிறார் சிம்பு.

'பசங்க', 'வம்சம்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படங்களுக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் இசையமைப்பாளராக தனது தம்பி குறளரசனை அறிமுகப்படுத்துகிறார்.

இப்படத்தினை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அவரது அப்பா டி.ஆர் தயாரிக்கிறார். சந்தானம், சூரி உள்ளிட்டவர்களும் சிம்புவுடன் நடிக்கவிருக்கிறார்கள். சிம்புவுடன் சூரி நடிக்கும் முதல் படம் இது.

படத்தின் பெயரோ, நாயகி யார் என்பதோ இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது கிராமத்து பின்னணி கொண்ட நகைச்சுவை கலந்த காதல் கதையாம். தனது நடிப்பில் உருவாகும் வித்தியாசமான படம் இது என்று ட்விட்டியுள்ளார் சிம்பு.

படப்பிடிப்பு இன்று தான் துவங்கியிருக்கும் நிலையில், டி.ஆர் முன்னணி சேனல் நிறுவனத்திற்கு படத்தின் உரிமையை அதற்குள் பெரும்விலைக்கு விற்றுவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்