'இரண்டாம் உலகம்' தீபாவளிக்குப் பிறகு தான் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. அதற்காக படுதீவிரமாக இயங்கிவந்தார்கள்.
படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால் படம் தயாராக நீண்ட நாட்கள் ஆனது. அப்பணிகளை முடிந்து படம் தயாராவதற்குள், ஹாரிஸ் மற்ற படங்கள் பிஸியாகி விட்டார்.
இதனால் படத்தின் பின்னணி இசையை அனிருத் அமைத்திருக்கிறார். தீபாவளிக்கு 3 படங்கள் கடும் போட்டியிடுவதால், இப்போது படத்தினை நவம்பர் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அனுஷ்கா நாயகியாக நடித்திருப்பதால் படத்தின் தெலுங்கு பதிப்பும் தயார். அப்பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 26ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் திரைப்படத்தை ஒரே தேதியில் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago