'கோச்சடையான்' படத்தில் தனது பெயரை சரியாக பயன்படுத்தவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வருத்தம்.
கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி - தீபிகா படுகோன் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'ராணா'. ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அப்படம் கைவிடப்பட்டது.
உடல்நிலை சரியானவுடன் செளந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் ரஜினி. MOTION CAPTURE TECHNOLOGY படம் என்பதால் சில நாட்கள் தான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.
லண்டனில் நடைபெற்ற அப்படப்பிடிப்பில் கூட கே.எஸ்.ரவிக்குமார் கலந்துக் கொண்டார். ஏனென்றால் 'கோச்சடையான்' படத்திற்கு இயக்குநர் மேற்பார்வை பொறுப்பு அவரிடம் தான் இருந்தது.
ஆனால், தற்போது இயக்குநர் மாதேஷ் இப்படத்தில் பணியாற்றி வருகிறார். 'கோச்சடையான்' படத்தின் விளம்பரங்கள், டீஸர் என அனைத்திலும் மாதேஷ் பெயர் தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
'ராணா' தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது ரஜினிக்காக கே.எஸ்.ரவிக்குமார் எழுதிய கதை தான் 'கோச்சடையான்'. படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருந்ததால் தான் இயக்கும் பொறுப்பை செளந்தர்யாவுக்கு கொடுத்தாராம்.
படப்பிடிப்பு, டப்பிங் என அனைத்தும் முடித்து கொடுத்த எனது பெயரை சிறிதாக போட்டுவிட்டு மாதேஷ் பெயரை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்ற வருத்தத்தில் இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago