விமலை இயக்கும் கண்ணன்

By ஸ்கிரீனன்

விமல் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடித்த 'சேட்டை' என்ற படத்தினை இயக்கியவர் கண்ணன். அப்படம் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. 'ஜெயங்கொண்டான்', 'கண்டேன் காதலை' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த கண்ணன், 'வந்தான் வென்றான்', 'சேட்டை' ஆகிய படங்கள் மூலமாக சறுக்கினார்.

தற்போது விமல் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார் மைக்கேல் ராயப்பன்.

விமலுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கி, ஜுன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் எழுச்சி பெறும் நம்பிக்கையில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்