அழகுராஜா தோல்வி : நவம்பர் 14 முதல் வில்லா

By ஸ்கிரீனன்

'அழகுராஜா' படத்தின் தோல்வியால் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 'வில்லா' படத்தினை உடனடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறது.

தீபன் சக்கரவர்த்தி இயக்கிய 'வில்லா' படத்தின் விநியோக உரிமையை ஸ்டூடியோ க்ரீன் வாங்கியிருக்கிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டாலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தினை வெளியிடாமல் இருந்தது.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் தீபாவளிக்கு 'அழகுராஜா' படத்தினை வெளியிட்டார்கள். ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் மூவரும் இணைந்திருப்பதால், அனைவருமே இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

பல்வேறு திரையரங்குகளில் 'அழகுராஜா' படத்தினை எடுத்துவிட்டு 'ஆரம்பம்', 'பாண்டியநாடு' ஆகிய படங்களை திரையிட்டு வருகிறார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இதனை ஈடுகட்டும் வகையில், 'வில்லா'வை உடனடியாக, நவம்பர் 14ம் தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 'அழகுராஜா'வுக்கு ஒப்பந்தம் செய்த திரையரங்குகள் அனைத்திலுமே 'வில்லா' படத்தினை வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது ஸ்டூடியோ க்ரீன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்