கமல் - மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தினை ஜனவரி 2014ல் மீண்டும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
கமல், மாதவன், நாசர், கிரண் மற்றும் பலர் நடிக்க, சுந்தர்.சி இயக்கிய படம் ‘அன்பே சிவம்’. வித்யாசகர் இசையமைக்க, லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்தது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அனைத்துமே கமல் தான். இயக்குநர் பொறுப்பை சுந்தர்.சி மேற்கொண்டார்.
2003ம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், கமலின் நடிப்பிற்கு பெரும் பாராட்டும் கிடைத்தது.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன், ‘அன்பே சிவம்’ படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி, ஒலி அமைப்பிலும் புதுமை செய்து படத்தினை 2014 ஜனவரியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
கம்யூனிஸ்ட், மாற்றுத்திறனாளியான கமலும், விளம்பரப் பட இயக்குநரான மாதவனும் ஒரு விபத்தின் காரணமாக சந்தித்து, அதற்குப் பிறகு அவர்கள் மேற்கொள்ளும் பயணமே ‘அன்பே சிவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago