“ டெல்லில ’முதல்வன்’ படம் மாதிரியே நடக்குது பாருங்க..” என இணையத்தில் பலர், டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றது முதலே கருத்து தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் டெல்லி மின்சார வாரிய ஊழியர்கள் பணியிட மாற்றம், சஸ்பெண்ட் என ’முதல்வன்’ படத்தினைப் போலவே கெஜ்ரிவாலும் தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறார் என்றும் பரபரப்பானது.
இது குறித்து, இயக்குநர் ஷங்கர் தனது ஃபேஸ்புக் தளத்தில் “ 2013 இன்ப அதிர்ச்சியாக முடிந்தது. (அர்விந்த்) கெஜ்ரிவால் சம்பவங்களை ‘முதல்வன்’ / ‘நாயக்’ படத்தோடு ஒப்பீடு செய்து செய்தி ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும், இணையத்தில் சமூக ஊடகங்களும் எழுதின.. எல்லாருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு வாழத்து தெரிவித்துள்ள ஷங்கர், மேலும் “விக்ரமை வைத்து க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரிசா மற்றும் விசாகப்பட்டிணத்தில் படபிடிப்பு, ஸ்பெஷல் மேக்கப் என பரபரப்பாக இயங்கி வந்ததால் இணையத்தில் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நேரமில்லாமல் இருந்தது. ‘ஐ’ பட வேலைகளை முடிக்க விரைகிறேன்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago